Thursday, March 3, 2022

 #பெரம்பலூர்_சம்பா_மிளகாய்

களபகிர்வு: அருண்சங்கர்.க
*கரிசல்பூமி கந்தகபூமியான விருதுநகர் மாவட்டத்தின் பிரதான பயிராக விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய நண்பன்’ என்றே மிளகாயைச் சொல்லலாம்.*









நாற்று விட்டு ஐப்பசி அடைமழையில்
நடவு செய்த சம்பா நீள மிளகாய்..
டிசம்பர் முதல் வாரத்திற்கு பிறகு மழை பொய்த்ததால், மழைநீர் பாசனம்(RainHose) முறையில் குறைவான தண்ணீர் பயன்படுத்தி நஞ்சில்லாமல் விளைந்தது..
*ஊடு உழவு கருவி கொண்டு களையெடுப்பதற்கு வசதியாக நேர் நேர் வரிசைமுறையில் நடவு செய்தது*.
குறைவான இடுபொருட்கள் இயற்கைபூச்சிவிரட்டி,மீன்அமிலம்,வேப்பங்கொட்டை கரைசல் சுழற்சி முறையில் பயன்படுத்தி இயற்கை முறையில் அறுவடை செய்தது..
*களையெடுப்பதற்கு தேன்கனி நாராயணன் கண்டுபிடித்து வடிவமைத்த #சைக்கிள்_#ஊடு_உழவு_கருவி பயன்படுத்தி 2முறை மட்டும் களையெடுக்கப்பட்டது*.
.


வெயிலின் தாக்கத்தைக் குறைக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர் பாதுகாப்புக்கு கரையோரத்தில் ஆமணக்கு, முருங்கை, அகத்தி நடவு செய்யப்பட்டது. இடைஇடையே செண்டுமல்லி, சூரியகாந்தியும் ஊடு பயிராக நடவு செய்துள்ளோம்.
மிளகாய் வத்தலாக. மாற்றி வருடம் முழுவதும் சேமித்து வைத்து விற்பனை செய்ய சந்தைக்கு ஏற்ற பயிர்..
குறிப்பாக. எங்கள் மாவட்டத்தில் சாத்தூர் பகுதியில் மிளகாய் வத்தல் சந்தையே உள்ளது..அப்பகுதியில் கிராமத்து முன்னோர் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சேமித்து வைத்துள்ள மிளகாய் கொண்டுசென்று சந்தையில் விற்பனைசெய்து மற்ற பொருட்களை வாங்கிசென்று தற்சார்பு பொருளாதாரமாகவும் பண்டாமாற்று முறையில் இயற்கை வாழ்வியலை வாழ்கின்றனர்..
விதைபகிர்வு: Nallappan Thangaraju

No comments:

Post a Comment