Wednesday, March 2, 2022

 ஒருங்கிணைந்த இயற்கை வழி வேளாண்மை பயிற்சி மற்றும்

தென்மாவட்ட உழவர்கள் சந்திப்பு கலந்துரையாடல் , ஒருங்கிணைப்பு :
*****************************************************************************************
”வேளாண்மை என்பது பகுதி சார்ந்ததே,
இடத்துக்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும் “
என்கிற நம்மாழ்வார் ஐயாவின் கருத்தியலோடு
பயிற்சி தொடங்கியது
ஒற்றை வணிக நோக்கத்திற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பமும், வேளாண் பட்டப்படிப்பும் உழவர்களுக்கு பொறுந்தாது. அது உழவர்களை கடனாளியாக்கும். உண்ணும் உணவை நஞ்சாக்கி, அனைவரையும் நோயாளியாக்கும்.
இதற்கு மாறாக ஒவ்வொரு 40கி.மீட்டர் சுற்றளவுக்கும் எந்த மாதிரியான வேளாண்மைமுறை இருக்க வேண்டும், எதை விளைவிக்க வேண்டும் என்பதை அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். களத்தில் பல அனுபவங்களையும், தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்ட உழவர்களையே பயிற்றுனர்களாக்கி, அனைவருக்கும் பயிற்சியளிக்க வேண்டும்.





அங்கு விளைந்ததை அந்தந்த பகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்தகைய சூழல் உருவாகும்போது “ உழவர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும். உண்பவர்களுக்கு கொடுத்த பணத்திற்கு நஞ்சில்லாத உணவு உத்திரவாதம் செய்யப்படும். தற்சார்பு சமூகம் உருவாகும். கிராமங்கள் வாழும் கிராமமாகும். என்கிற நம்மாழ்வார் ஐயாவின் கருத்தியலோடு,




கடந்த வெள்ளிக்கிழமை ( 11-2-202) காலை 3நாள் களப்பயிற்சி தொடங்கியது. சிவகாசியை மையமாகவும், அதிகபட்சமாக 70கி.மீட்டர் தொலைவிலிருந்ந்துமாக பயிற்சிக்கு 25 நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

பயிற்சியில் தேன்கனி உழவர் கூட்டமைப்பின் உழவர்களால் விதை தொடங்கி, விற்பனை வரையிலான கள அனுபவங்கள் பகிரப்பட்டது. இறுதிநாளில் ( 13-2-2022 ) நம்மாழ்வார் ஐயாவோடு நீண்ட காலம் பயணித்த சாலை ஏங்கல்ஸ்ராஜா அவர்கள் இணைந்து கொண்டார்.






பின்னர் ஏங்கல்ஸ்ராஜா அவர்கள் நம்மாழ்வார் ஐயாவோடு இணைந்து கற்றுக் கொண்ட வாழ்வியல் அனுபவங்களையும் , அதன் மூலமாக சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், இனி நாம் பயணிக்க வேண்டிய பாதை குறித்தும்பல்வேறு தளங்களில் சுவராசியமாகவும் தெளிவாகவும் பகிர்ந்து கொண்டார்.


பின் மரபு கலை பொருட்கள், கட்டுமானம் குறித்து சிரட்டை சிற்பி ஆனந்த பெருமாள் அவர்கள் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு “ கீதா வாழ்வியல் பண்ணையின் கீதா இராதகிருஷ்ணன் தம்பதியினர்கள் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
மூன்றுநாட்களுமே நம் மண்ணின் மரபு கருந்தானியங்கள், அரிசி வகைகள், காய்கறிகளில் சமைத்த, சமைக்காத உணவுகளையும் அவற்றை சமைக்கும் முறைகளையும் தேன்கனி அமைப்பின் தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் குழுவினரோடு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
ஒருங்கிணைப்புக் கூட்டம் :
**********************************
மாலை 4.30மணிக்கு தென்மாவட்ட உழவர்கள் ஒருங்கிணைப்பு தொடங்கியது. விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, காரைக்குடி என பல மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100பேர் கலந்து கொண்டனர்.

உழவர்கள் மற்றும் களச்செயல்பாட்டாளர்களின் அறிமுகத்தோடு தொடங்கி, ஏங்கல்ஸ்ராஜா அவர்கள் விதை, இயற்கை வேளாண்மை, சூழலியல், மருத்துவம், வாழ்வியல், பருவநிலை மாற்றங்கள் குறித்தும், இனி நாம் செய்ய வேண்டியவைகள் குறித்தும் அனைவரோடும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இறுதியாக ஐயா விரும்பிய உழவர்களை ஒருங்கிணைத்தல், “ ஊர்தோறும் உழவர்களின் சந்தைகளைத் ” தொடங்குதல், விதைப் பகிர்வு, பயிற்சிகளை தொடர்ந்து திட்டமிடுதல், வாழும் கிராமங்களை உருவாக்குதல் போன்ற பல செயல்பாடுகளுக்கான பொறுப்பாளர்களோடு நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.
அனைத்து செயல்பாடுகளிலும் களத்தில் எந்த எதிர்பார்ப்புமில்லாமல், தன்னார்வமாக உழைத்த தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பின் அனைத்து நண்பர்களுக்கும், வானகம் ஏங்கல்ஸ்ராஜா அவர்களுக்கும். இடமளித்து உதவிய கீதா வாழ்வியல் பண்ணைக்கும், நிகழ்வினை பகிர்ந்து கொண்ட ஊடக நண்பகளுக்கும், நிகழ்வில் கலந்து கொண்டு சமூகத்தில் மாற்றதை விதைக்க உள்ள நம்மாழ்வார் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களுக்கும் நன்றிகள் பல..
ஒருங்கிணைவோம்....
தற்சார்பு சமூகமாவோம்.
மாற்றம் என்பது சொல் அல்ல. செயல்…

No comments:

Post a Comment