Friday, July 5, 2019

விதைகளே பேராயுதம்...!
கோ.நம்மாழ்வார்

வறட்சியைத் தாங்கும் 35வகை
பாரம்பரிய சோளங்கள் மீட்பு…
********************************************
மரபுசோளத்தின் சிறப்பு
அனுபவப் பகிர்வு : ஜெ.கருப்பசாமி
Image may contain: text

தேன்கனி அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் நண்பர்களின் தீவர உழைப்பாலும், தேடலாலும் இந்தாண்டு பயிர்செய்து, மீட்கப்பட்ட நம் மண்ணின் பாரம்பரிய சோள ரகங்களின் பட்டியல்…
• உருண்டை (மைக்) வெள்ளைச் சோளம் 90 நாள்
• வெள்ளை நெட்டை சோளம் 90நாள்
• வெள்ளை கட்டை சோளம் 85நாள்
• சிகப்பு சம்பா இருங்கு சோளம் 120நாள்
• கருப்பு சம்பா இருங்கு சோளம் 110நாள்
• சாண இருங்கு சம்பா சோளம் 110நாள்
• மாப்பிள்ளைமினுக்கி சிகப்பு சம்பா சோளம் 110நாள்
• மாப்பிள்ளைமினுக்கி கருப்பு சம்பா சோளம் 85நாள்
• சிகப்பு வாழைப்பூ சோளம் 100நாள்
• வெள்ளை இனிப்பு கட்டை சோளம் 100நாள்
• தலை விரிச்சான் நெட்டை சிகப்பு தீவனச் சோளம் 110நாள்
• தலை விரிச்சான் நெட்டை கருப்பு தீவனச் சோளம் 110நாள்
• தலை விரிச்சான் குட்டை சிகப்பு தீவனச் சோளம் 110நாள்
• மத்தாப்பு வெள்ளைச் சோளம் 100 நாள்
• மஞ்ச மக்கட்டை சோளம் 95 நாள்
• செங்கோட்டான் சிகப்பு மைக் சோளம் 90நாள்
• மஞ்சள் உருண்டை சோளம் 95நாள்
மற்றும் 18வகையான பெயர் மறந்துபோன சோளவகைகளும் இதில் அடக்கம்..
இவை அனைத்தும் ஜூலை 14, ஞாயிறன்று சிவகாசியில் நடைபெறும் நாட்டுவிதைக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப் பட உள்ளது.
நாள் : 14-7-2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை
இடம் : ராக்லாண்ட் பள்ளி, SCMS பள்ளிபின்புறம்,
சாட்சியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு,
சிவகாசி. விருதுநகர் மாவட்டம்
அனுமதி இலவசம்.
மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தொடர்புக்கு: 94435 75431, 96554 37242, 9787648002.
Image may contain: 1 person, plant, flower, outdoor and nature
இந்த சோளங்களின் சிறப்பு :
*************************************
1. நன்கு வறட்சி தாங்கி வளரும். 4 மழையும், பனியும் இருந்தால் போதும் விளைந்துவிடும். தண்ணீர் பாய்ச்சுதல், மின்சாரம் தேவையில்லை.
2. நோய்த் தாக்குதலோ, பூச்சித் தாக்குதலோ கிடையாது.
3. அரிசியாகவும், உணவாகவும், தோசை, பனியாரம் போன்ற பலகாரமாகவும் உண்ணலாம்.
4. இதன் பச்சைத் தட்டை கரும்பு போல் இனிப்பதால் கால்நடைகளுக்கு முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம். நன்கு வளர்ந்து தட்டையை காய்ந்து போகும் வரைவிட்டு, வைக்கல்போர் போடுவது போல் சோளப் போர் போட்டு வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தலாம்.
5. மண்ணில் உள்ள உவர்தன்மையை மாற்றும் சிறப்புடையது.
6. இதன் அடிக்கட்டையை அப்படியே நிலத்தில் விட்டுவிட்டால் கரையான்களுக்கு நல்ல உணவாகப் பயன்பட்டு, மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்யும்.
7. வெளிநாடுகளில் இதன் தட்டையில் சோள சர்க்கரை ( கரும்பு சர்க்கரை போல் ) தயாரிக்கிறார்கள்.
8. சோளத்தை நெருக்கமாக விதைத்தால் அருகம்புல், கோரை போன்ற கட்டுப்படுத்த முடியாத பல களைகளை குறைந்த செலவிலும், எளிமையான வேலையிலும் கட்டுப்படுத்துகிறது.
Image may contain: 2 people, people standing and outdoor
மேலும் பறவைகளுக்கும், படைக்குருவிகளுக்கும், பல்லுயிர்களுக்கும் உணவை உறுதி செய்யும் நம் மண்ணின் மரபுப்பயிர்தான் சோளம்.
ஆனால் இன்று கம்பெனிகளின் சூழ்ச்சியால், விவசாயிகளுக்கும் சூழலுக்கும் பொருந்தாத கம்பெனிகளின் மக்காசோளமே பிரதானப் பயிராக மரபுச்சோளம் விளைந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.
மேலும் மக்காசோளம் வறட்சியும் தாங்காது, படைப்புழு போன்ற பூச்சித் தாக்குதலுக்கும் உள்ளாகி, சந்தைரீதியாகவும் பெரும் நஷ்டத்தை இன்று விவசாயிகளுக்கு ஏற்படுத்திவருகிறது.
இதிலிருந்து மீண்டு நம் மண்ணின் மரபு சோளங்களைப் பயிரிடுவோம். மண்ணின் விதைகளையும், சூழலையும் காப்போம்.
விதை மீட்புக்கு உதவிய வானகம், நாராயணன், ஏகாம்பரம் ஐயா, ரெங்கசாமி ஐயா, நல்லப்பன், ஜனகன் மற்றும் பல விவசாயிகளுக்கும் நன்றிகள்…
விதைகளே பேராயுதம்...!

No comments:

Post a Comment