Thursday, March 17, 2022

களப் பகிர்வு: அருண்சங்கர்.க
*உண்பதை விளைவிக்கணும்*
அல்லது
*விளைவிப்பதை உண்ணணும்*
- கோ.நம்மாழ்வார்
குறுகிய அளவோ அல்லது அதிக அளவோ வேளாண்மை செய்யும் பெரும்பாலோனோர், ஒரே பயிர் அல்லது 3-4 அளவிலான வேளாண்மை Monoculture (ஒற்றைபயிர் வேளாண்மை) செய்வதால் ஒரே மாதிரியான விளைச்சல் வருகிறது.
ஆகையால் சந்தையிலும் ஒரே மாதிரியான பொருட்களின் வரவு அதிகமாகி, கட்டுபடியான விலையில்லாமல் உழவர்கள் நஷ்டமடைகின்றனர்.
உணவும் வீணடிக்கப் படுகிறது.
ஆனால் நம்மாழ்வார் ஐயா கூறிய தத்துவத்தை உள்வாங்கி தற்சார்பு வாழ்வியல் முன்னெடுக்கும் அனைவரும் பலபயிர் சாகுபடி முறையை ( நிரந்தர வேளாண்மை ) கையாள்கின்றனர்..


*நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவது*
*நம்முடைய சாம்பார் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்காது பலபயிர் சாகுபடி முறையை செய்யுணும், அப்போதுதான் ”தற்சார்பு இயற்கைவழி வேளாண்மை சாத்தியப்படும் ” என்பார்.."*
"மேலும் நம் நிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களின் விளைச்சலிலும் பன்மயம் ஏற்படும். ஒரே பொருளை அதிகமாக உற்பத்தி செய்து சந்தைக் கொடுக்கவோ அல்லது ஒரே பொருளை வைத்துக் கொண்டு அதிக நபர்களைத் தேடி அலையாமல்,
*பன்மயமான விளைச்சலை மேற்கொண்டு குறைவான நபர்களுக்குத் தேவையான அதிகப்படியான பொருட்களை கொடுத்துவிட முடியும்.* அப்போது நமக்கும் கட்டுபடியான விலையை உறுதி செய்துவிடமுடியும்.
உண்பவரின் தேவையையும் எளிதில் பூர்த்தி செய்துவிட முடியும்.
ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு இடத்தில் உற்பத்தி செய்து, பின் ஒவ்வொரு இடமாக சந்தைப்படுத்த அலையவேண்டாம்.
இதனால் எரிபொருள் வீணடிக்கப் படாமல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
அதன்படி, *சிவகாசியில்*
நமது #தேன்கனியின் ஆராய்ச்சிப் பண்ணையான,
#கீதாவாழ்வியல் பண்ணையில் *பலபயிர் சாகுபடி முறையில் நிரந்தர வேளாண்மை சாத்தியமாகிறது. அதுவும் இங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்றார்போல் இந்தபகுதியில் பயிரிடும் குறிப்பிட்ட பயிர் ரகங்களுடன் சேர்த்து, இந்த மண்ணுக்கு ஏற்ற அனைத்த வகையான பயிர்களையும் ஆராய்ந்து கடந்த 3-4வருடங்களாக நிரந்தவேளாண்மை செய்து, தினசரி 3-4குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகள் நஞ்சில்லாமல் இயற்கைவழி வேளாண்மையில் உற்பத்தியாகிறது..*



மேட்டுப்பாத்தி மற்றும் பள்ளப்பாத்தி முறையில் மூடாக்கு அமைத்து, குறைவான சொட்டுநீர் பாசனமுறையில் இந்த கந்தகபூமியில் நிறைவான மனதிற்கு நிம்மதியான அழகிய பல்லுயிர் சூழல்நிறைந்த ஒரு இயற்கை வாழ்வியல் பண்ணையை உருவாக்கி ஆராய்ச்சி நிலையமாக மாற்றியுள்ளோம்..
*இன்றைய விளைச்சல்*
இடம்: கீதாவாழ்வியல்மையம் /
( #தேன்கனி ஆராய்ச்சி பண்ணை)
பாறைப்பட்டி/ சிவகாசி.
விருதுநகர் மாவட்டம்

No comments:

Post a Comment