Monday, June 18, 2018

தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு !
நிலத்தடி நீரை குடிநீராக மாற்றுதல் !
ஆவணப் பதிவு :
ஜெ.கருப்பசாமி & நாரயணன்
எந்தவொரு இயற்கை கோட்பாடுகளையும் உடனே நம்ப வேண்டாங்கையா...
அதை உங்களது நிலத்தில் செயல்படுத்தி திருப்தி இருப்பின் ஏற்றுக் கொள்ளுங்கையா...
கோ.நம்மாழ்வார்
தற்போதைய நெருக்கடியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சனையாகவே உள்ளது. இந்நிலையை முன்கூட்டியே
உணர்ந்த நம்மாழ்வார் ஐயா அவர்கள் தான் பங்கேற்ற பயிற்சி முகாம்களில் எல்லாம் கூறி வந்தார்.
என்னெவெனில் இனி தமிழ்நாட்டிற்கு பருவமழை என்பது கேள்விக்குறியே… காரணம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள காடுகளை அழித்து தேயிலை செடிகளைப் பயிரிட்டுள்ளோம். கடந்த முப்பது ஆண்டுகளில் பருவமழைக்குப் பதிலாக புயல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
ஆகையால் ஒரு வருடம் முழுவதும் பருவத்திற்கு பருவம் சீரக பெய்த மழையான , வருடத்தின் சில மாதங்களில் புயலாக உருவாகி மொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிடுகிறது.
இதன் காரணமாக நாம் கொட்டித் தீர்க்கும் மொத்த மழையையும் எந்தெந்த வழிகளிலெல்லாம் ( ஏரி , குளம், பண்ணைக்குட்டை, அகழி, ஆறு..) சேமிக்க முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் சேமித்தால் மட்டுமே தண்ணீரை உறுதிபடுத்தி எவ்வித கடும் வறட்சியையும் வெல்லாம்.
இதற்குத் தீர்வாக :
• நம் நிலத்தைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தல்
• உயரமான வரப்புகள் அமைத்தல்
• மழை நீர் தடுப்புகள் அமைத்தல்
• பண்ணைக் குட்டை அமைத்தல்
• குளம் வெட்டுதல்
• நிலத்தை தோப்பாக இல்லாமல் காடுகளாக மாற்றி, ஓரினப் பயிர் சாகுபடியைத் தவிர்த்து, எல்லா விதமான நீண்ட கால மரங்களையும் பயிர் செய்தல்.
• செலவில்லா சாகுபடி முறைக்கு செல்தல்
• ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றுதல்

இது போன்ற பல வழிகளை நமக்கு நிருபித்துக் காட்டிச் சென்றுள்ளார்.
வானகம் குமார் ஐயா :
எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக நமது வானகம் பண்ணையை உருவாக்கி அனைவருக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடும் செய்து விட்டு தான் நம்மாழ்வார் ஐயா சென்றுள்ளார்.
அதுபோல் ஒரு நிரந்த வாழ்வியல் மாதிரிப் பண்ணை தான் கோபியில் அமைந்துள்ள வானகம் குமார் ஐயாவின் பண்ணை. அந்தப் பண்ணையில் இருந்த கற்றவற்றையெல்லாம் கடும் வறட்சி மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் பல இயற்கை விவசாயிகளுடன் கரம்கோர்த்து தேன்கனி பண்ணை வடிவமைப்புக்குழு தமிழகமெங்கும் ஆங்காங்கு பல மாதிரிப் பண்ணைகளை வடிவமைத்து வருகிறது.
அப்படிப்பட்ட பண்ணைகளில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூரில் உள்ள அம்மையப்பன் ஐயா அவர்களின் பண்ணை.. இந்த பண்ணையில் செய்துள்ள சில வேலைகளை ஆவணப்படுத்தி குறும்படமாக தயாரித்துள்ளோம்..
இதை முழுவதுமாகப் பார்த்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறோம்.
எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த நம்மாழ்வார் ஐயா மற்றும் வானகம் குமார் ஐயாவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆவண படத்தை பதிவு செய்த வெங்கடேஷ் அருணாச்சலம் மற்றும் இதை வடிவமைப்பு செய்த கார்மேகம் ஜெ அவர்களுக்கும் நன்றி...
இப்படிக்கு
தேன்கனி பண்ணை வடிவமைக்குக் குழு &
தேன்கனி இயற்கை விவசாய பயிற்சி மையம்,
சிவகாசி.
தொடர்புக்கு :
ஜெ.கருப்பசாமி 94435 75431
நாராயணன் : 96554 37242
Fb/ thenkanivalviyalmaiyam
www.thenkanivalviyalmaiyam.blogspot.com