Monday, January 18, 2016

 தேன்கனி உழவர் சந்தை








கடந்த ஞாயிறுக்கிழமை (17-1-16) நமது தேன்கனி உழவர் சந்தை சிவகாசி காரனேசன் பஸ்ஸடாப் இரட்டை சிலை அருகில் தேன்கனி இயற்கை விவசாயிகள்
மதிப்பு கூட்டாளர்கள்
இயற்கை மருத்துவர்கள்
இயற்கை ஆர்வலர்கள்
மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு நடைபெற்றது.
சந்தையில்
நஞ்சில்லா கீரை வகைகள்
நஞ்சில்லா காய்கறி வகைகள்
பாரம்பரிய அரிசிவகைகள்
சிறு தானிய வகைகள்
நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, மண்டை வெல்லம், பணங்கற்கண்டு
பயறு வகைகள்
சிறுதானிய லட்டு வகைகள்
ஆவாரம் பூ தேநீர் மற்றும் ஆவாரம் பூ தேநீர் பொடி போன்ற பொருட்கள்
கண்காட்சி மற்றும் சந்தைப் படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு

http://thenkanivalviyalmaiyam.blogspot.in/

Wednesday, January 13, 2016

 மண மணக்கு, கம கமக்கும் ” திரிகடுகம் கருப்பட்டி ” :


சென்னையில் நாளை ( மே 3 காலை 9மணி முதல் இரவு 9.30, அண்ணா ஜெம் மெட்ரிக் பள்ளி, அண்ணா நூற்றாண்டு நூலகம், எதிரில், சென்னை )நடக்கும் பிரண்டைத் திருவிழாவில் தேன்கனி உழவர் நேரடி விற்பனை சந்தையின் அரங்கில் நமது மண்ணின் உணவான பாரம்பரிய , உடலை வலுவாக்கும் “ திரிகடுகம் கருப்பட்டி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
இது பனை நீர்,
 சுக்கு, 
மிளகு, 
திப்பலி 
முந்திரி,
 பிஸ்தா,
 ஏலக்காய் 
மட்டுமே கலந்து ( எந்த வித இரசாயண கலப்பில்லாமல்) தயாரிக்கப்பட்டது. 
அழிக்கப்பட்டு வரும் மரபுத் தொழிலை தோழமையுடன் காப்போம்..
தொடர்புக்கு : 9443575431, 9787648002

Tuesday, January 12, 2016

வெள்ளை சர்க்கரை, மைதா மாவு - விஷம்

வெள்ளை சர்க்கரை, மைதா மாவு - விஷம்

பரோட்டாவின் கதை -பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை



பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சினை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது, நாம் பிறந்த நாள் கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது..?

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயல் பெராக்சைட் (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் ‘டை’ யில் உள்ள ரசாயனம்.
இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரிழிவுக்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccharine , Ajino motto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இவை மைதாவை அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் உண்டு பண்ணப் பயன்படுகிறது. ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரிழிவு வர காரணமாகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல. மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் .
இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்பதை தவிர்ப்பது நல்லது.
Europe union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல் , இருதய கோளாறு , நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர் .