Monday, October 2, 2023

#ஒருங்கிணைந்த_வேளாண்மை_பண்ணை_வடிவமைப்பு:


பகிர்வு : க.அருண் சங்கர்

#பண்ணைவடிவமைப்பு
#அகழி

#நிலசீர்திருத்தம்

#மழைநீர்சேமிப்பு
#தேன்கனி

#பண்ணைக்குட்டை

மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் தற்போது பருவ காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் கோடைகாலங்களில் குளிர்ந்த பனிப்பொழிவு சூழலும் உள்ளது..

இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களிலும் உடலிலும் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்கின்றனர்.இவற்றில் இருந்து விடுபடுவதும் தற்காத்துக் கொள்வதற்காகவும் நிலம் உள்ளவர்கள் தங்களுடைய பழைய நிலங்களை மீட்டெடுத்தும் நிலம் இல்லாதவர்கள் புதிய நிலங்களை தேடியும் வருகின்றனர்.

அவ்வாறு நிலங்களை கையில் எடுத்தவர்கள் அவற்றை மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் உள்ளனர்.

உதாரணமாக #இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு,ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான புதிய முயற்சி நோக்கி தேடலை தொடர்கின்றனர்..
















தேடலின் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களிலும் நண்பர்களுடைய பண்ணைகளை பார்வையிட்டும் தாமும் அது போல் உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்..

இவற்றில் பண்ணை வடிவமைப்பு என்பது ஆரம்பத்தில் தெளிவற்ற புரிதலுடன் தவறுதலாக செய்துவிட்டால் பின்பு அவற்றை மாற்றி அமைப்பதும் சிரமமான ஒன்றாக மாறிவிடும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு #தேன்கனி குழுவினர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் வடக்கு முதல் தெற்கு வரை வெவ்வேறு விதமான சூழ்நிலையில் வெவ்வேறு விதமான பண்ணைகளை வடிவமைத்து கொடுத்துள்ளோம்.

ஐயா #நம்மாழ்வார் கூறியது போல் விவசாயம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடும் இந்த கூற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த நிலத்திற்கு ஏற்றார் போல் நிலம் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பண்ணைகளை சிறப்பாக வடிவமைத்து வெற்றியும் கண்டுள்ளோம்.

உதாரணமாக நிலங்களில் உயிர்வேலி அமைப்பது (சுற்றுச்சூழலுக்கு உகந்தது), வரப்புகளில் அகழி அமைப்பது, பனைக்குட்டை அமைப்பது, மழைநீர் தன்னுடைய நிலத்தை விட்டு வெளியில் செல்லாது போல் நிலங்களை மாற்றி அமைப்பது அந்தந்த சூழல் ஏற்றாற் போல் நாட்டு மரங்களை தேர்வு செய்து நடவு செய்வது, தண்ணீர் தேவைக்கேற்றது போல் சொட்டுநீர் அமைத்துக் கொடுப்பது போன்ற,மானாவரிக்கு ஏற்ற நிலங்களை வடிவமைப்பது,

இயற்கை விவசாயம்,இயற்கை வாழ்வியல்,தற்சார்பு வாழ்வியல்,கால்காணி விவசாயப்பயிற்சி, உடலேமருத்துவர், ஊர்திரும்புதல், இயற்கை உணவகம், இயற்கை விவசாய விளைப்பொருள் சந்தை, குழந்தைகள் பயிற்சி, வாழும் கிராமங்கள், கிராமங்களில் நீர்நிலைகள் புணரமைப்பது என எண்ணற்ற வேலைகளை தேன்கனி குழுவினர் நில உரிமையாளர்களின் விருப்பத்திற்கும்,பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அமைத்தும்,அதற்கான ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறோம்.

#பண்ணை வடிவமைப்பு முடிந்த பின்பு தொடர்ந்து நிலஉரிமையாளர்களிடம் பேசி தொடர்பு ஏற்படுத்தி கிடைக்கும் ஒய்வு நேரங்களில் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது என குழுவாக பயணிக்கிறோம்..

உப்பான கிணற்று நீரையும் விவசாயத்திற்கு ஏற்றாற்போல் தண்ணீராகவும் மாற்றியுள்ளோம்.
ஒன்றுக்கு பயன்படாத நித்தையும் மீட்டெடுத்து பலதானிய விதைப்புகளை முன்னெடுத்து பொன்விளையும் பூமியாக மாற்றியுள்ளோம்.

ஐயா #நம்மாவார் கூறியதை அனுதினமும் உள்வாங்கி தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் களஅனுபவங்களையும் மற்ற உழவர்களுக்கு கைமாத்தி அவர்களையும் தங்களில் ஒருவராக எண்ணி உடன் குழவாக இணைத்து தேன்கனி என்ற ஒரு மிகப்பெரிய விவசாய கூட்டமைப்பாக இயங்குகிறோம்..

தொடரும்......

பண்ணைவடிவமைப்புக்கு:
அ. நாராயணன்-96554 37242
ஜெ. கருப்பசாமி-94435 75431