Wednesday, May 4, 2016

சிவகாசியில் இயற்கை விவசாயிகளே நேரடியாக 
சந்தைப்படுத்துதல் மற்றும் கண்காட்சி :                                                           

”” சின்ன சின்ன மாற்றம் தான் பெரிய
சமூக மாற்றத்தை கட்டமைக்கும்ஐயா... “”
இது நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவது.
அதுபோல ஒரு மாற்றத்தையாவது செய்துவிட வேண்டுமென மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சிறிய அளவில் தொடங்கிய அமைப்புதான் "" தேன்கனி உழவர் வார சந்தை.""
இது சிவகாசியில் இயற்கை வழி விவசாயிகளால் கடந்த 3 ஆண்டுகளாக எல்லா ஞாயிறுதோறும் ஆரோக்கிய இயற்கை வாழ்வியலை விரும்புவோர்களின் பங்களிப்பில் சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும் 100வது வாரச் சந்தையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற ஞாயிற்றுக்கிழமை 1-5-2016 காலை 9.15 மணி முதல் மதியம் 12.30 மணிவரை “ பூச்சிக்கொல்லி நஞ்சில்லாமல் இயற்கை வழி விவசாய முறையில் விளைவித்த பொருள்களை விருதுநகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள இயற்கை வழி விவசாயிகளே நேரடியாக சந்தைப் படுத்த உள்ளனர். இதை “ நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான வானகத்தின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் “.
நமது சந்தையில் சிவகாசி மக்கள் கலந்து கொள்வது மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் கலந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. மேலும் வெளியூர்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக தற்போது பொருட்கள் பார்சல் சர்வீஸ் மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். அனைவரும் இணைந்து கரம்கோர்த்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
இடம் :
காரனேசன் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இரட்டை சிலை முன்புறம், சிவகாசி, விருது நகர் மாவட்டம் .
தொடர்புக்கு : 98431 27804, 9443575431, 9787648002, 9944207220
கண்காட்சியில் பார்வைக்கு மற்றும் விற்பனைக்கு :
சாப்பாடு வகைகள் :
1. குதிரைவாலி சாம்பார் சாதம்
2. காட்டுயாணம் சர்க்கரைப் பொங்கல்
3. சாமை முறுக்கு
4. ஆவாரம் பூ மூலிகை தேநீர்
காய்கறிகள், கீரைகள் , பழங்கள் :
1.இயற்கை முறையில் விளைந்த 12 வகையான கீரைகள்
2.நாட்டுக் காய்கறிகள்
3.நாட்டுப்பபாளி, கொய்யா, சப்போட்டா, மாம்பழம்
சந்தையில் கிடைக்கும் பொருட்கள் :
1. அருந்(சிறு)தானிய வகைகள் :
1. கைக்குத்தல் வரகு (Unpolished ) பச்சரிசி
2. கைகுத்தல் குதிரைவாலி (Unpolished ) பச்சரிசி
3. வரகு புழுங்கல் அரிசி ( Semi Polished & Boiled)
4. குதிரைவாலி புழுங்கல் அரிசி( Semi Polished & Boiled)
5. தினை புழுங்கல் அரிசி( Semi Polished & Boiled )
6. சாமை புழுங்கல் அரிசி ( Semi Polished & Boiled)
7. வரகு ( Semi Polished ) பச்சரிசி
8. குதிரைவாலி (Semi Polished ) பச்சரிசி
9. தினை (Semi Polished ) பச்சரிசி
10. சாமை (Semi Polished ) பச்சரிசி
11. பனிவரகு (Semi Polished ) பச்சரிசி
12. கேழ்வரகு தோல் நீக்கியது
காட்டுக் கம்பு
13. நாட்டுக் கம்பு தோல் நீக்கியது
14. சிகப்பு சோளம்
15. வெள்ளைச் சோளம்
16. இரும்பு சோளம்
2 செக்கு எண்ணெய் வகைகள் :
17. வாகை மரஉலக்கை கல்செக்கு நல்லெண்ணெய் கருப்பட்டி சேர்த்தது ஆட்டியது
18. செக்கு நல்லெண்ணைய் வெல்லம் சேர்த்து ஆட்டியது
19. செக்கு கடலை எண்ணெய்
20. செக்கு தேங்காய் எண்ணெய்
21. விளக்கு எண்ணெய் ( இயந்திர பயன்பாடு இல்லாமல் பாரம்பரிய முறையில் சட்டியில் )
3. இனிப்பு வகைகள் :

1. நாட்டு சர்க்கரை
2. மண்டை வெல்லம்
3. நயம் கருப்பட்டி (மங்காபுரம் சின்ன அச்சு)
4. திரிகடுகம் கருப்பட்டி ( சுக்கு, வால்மிளகு, திப்லி, ஏலக்காய் சேர்த்து மங்காபுரம் சின்ன அச்சு)
5. பனைகற்கண்டு
4. பாரம்பரிய மருத்துவ குணமுள்ள சிகப்பு அரிசி , கருப்பு அரிசி, கைகுத்தல் அரிசி, பொன்னி அரிசி வகைகள்:
1. மாப்பிள்ளை சம்பா சிகப்பு கைகுத்தல் புழுங்கல்
2. மாப்பிள்ளை சம்பா தீட்டிய புழுங்கல் அரிசி
3. கருப்புக் கவுணி கைகுத்தல் புழுங்கல்
4. மூங்கில் அரிசி
5. பாஸ்மதி பிரியாணி பச்சரிசி
6. கறுங்குறுவை சிகப்பு கைகுத்தல் புழுங்கல் அரிசி
7. காட்டுயானம் சிகப்பு கைகுத்தல் புழுங்கல் அரிசி
8. பூங்கார் சிகப்பு கைகுத்தல் புழுங்கல் அரிசி
9. குள்ளக்கார் சிகப்பு கைகுத்தல் புழுங்கல் அரிசி
10. தூய மல்லி பொன்னி புழுங்கல் அரிசி
11. கிச்சலி சம்பா கைகுத்தல் பொன்னி புழுங்கல்
12. வெள்ளைப் பொன்னி அரைத்தீட்டல்
13. பொன்னி (Deluxe)
14. கைகுத்தல் பொன்னி
15. சீரகசம்பா பச்சரிசி
16. இலுப்ப்பூ சம்பா அரிசி
17. இட்லி அரிசி
18. மாப்பிள்ளை சம்பா இட்லி அரிசி
19. கருடன் சம்பா சாப்பாடு அரிசி
20. சேலம் சன்னா அரிசி
21. ஆத்தூர் கிச்சடி சம்பா
22. குடவாழை சிகப்பு கைகுத்தல் புழுங்கல் அரிசி
23. குழியடிச்சான் சிகப்பரிசி
24. குருவிக்கார் சிகப்பரிசி
5. தேநீர் வகை :
1. ஆவாரா மூலிகை தேநீர் பொடி
6. பருப்பு வகைகள் :
1. நாட்டு பாசி பருப்பு
2. பாசி பயறு
3. நாட்டு துவரம்பருப்பு
4. நாட்டு செம்மண் முளைகட்டிய துவரம்பருப்பு
5. நாட்டு உருட்டு உளுந்தம் பருப்பு
6. நாட்டு தோல் உளுந்தம் பயறு
7. நாட்டு தோல் உளுந்தம் பருப்பு உடைத்தது
8. கடலை பருப்பு
9. கருப்பு கொண்டக்கடலை
10. வெள்ளை கொண்டக்கடலை
11. தட்டை பயறு
12. கொள்ளு (காணப்பயறு)
13. கருப்பு கொள்ளு
14. முழு பொரிகடலை பருப்பு
15. நிலக்கடலை
7. பலசரக்கு வகைகள் :
1. நாட்டு மல்லி
2. கடுகு
3. சீரகம், சோம்பு
4. மிளகு
5. வெந்தயம்
6. கொடம்புளி
8. தேன் வகைகள் :
1. மூணார் மலைத்தேன்
2. மூணார் கொசுத்தேன் (பொந்துத்தேன்)
3. பாலோடு பெட்டித்தேன்
4. தேனி மலைத்தேன்
5. முருங்கைத் தேன் பெட்டித்தேன்
9. பொடி வகைகள் :
1. மூலிகை குளியல் பொடி (22 பொருட்களின் கலவை )
2. மூலிகை சீகக்காய் பொடி
3. மசாலாப் பொடி 100 கிராம்
4. சமையல் மஞ்சள் பொடி
5. பூசு மஞ்சள் பொடி
10. சிகப்பு & கருப்புக்கவுணி அரிசி அவல் வகைகள் :
1. மாப்பிள்ளை சம்பா சிகப்பு கைகுத்தல் அவல்
2. இருங்கு சோள அவல்
3. கம்பு அவல்
4. வரகு அவல்
5. குதிரைவாலி அவல்
6. சாமை அவல்
11. தோசை வகைகள்:
1. நாட்டுக் கம்பு தோசை மிக்ஸ்
2. கேழ்வரகு தோசை மிக்ஸ்
3. வரகு தோசை மிக்ஸ்
4. சாமை தோசை மிக்ஸ்
5. குதிரைவாலி தோசை மிக்ஸ்
6. நவதானிய தோசை மிக்ஸ்
12. கஞ்சி , பாயாசம், லட்டு தயார் செய்ய மாவு வகைகள் :
1. முளைகட்டிய கம்பு மாவு / கம்பங்கஞ்சி மாவு
2. முளைகட்டிய கேழ்வரகு மாவு / கஞ்சி மாவு
3. முளைகட்டிய தினை மாவு
4. முளைகட்டிய கொள்ளு கஞ்சி மிக்ஸ்(பெருங்காயம் சேர்த்தது)
5. நுண்ணூட்ட நவதானிய சத்துமாவு
13. அடை தயார் செய்ய மாவு வகை :
1.பலதானிய அடை மிக்ஸ்
14. மூலிகை பல்பொடி வகைகள்
15. களி வகைகள் :
1. முளைகட்டிய உளுந்தங் களி
2. வரகு களி
3. குதிரைவாலி களி
4. சாமை களி
16. சிறுதானிய லட்டு 15 வகைகள் :
எள்ளு லட்டு, கம்பு லட்டு, இருங்கு சோள லட்டு, தினை லட்டு, வரகு லட்டு, குதிரைவாலி லட்டு, சாமை லட்டு, கேழ்வரகு லட்டு, பூங்கார் சிகப்பரிசி லட்டு, மாப்பிள்ளை சம்பா லட்டு, அவல் லட்டு, பாசிப்பயறு லட்டு, உளுந்தம் பயறு லட்டு, கொள்ளு லட்டு, நரிப்பயறு லட்டு, என பலவகையான லட்டு உருண்டைகள் நாட்டுசர்க்கரை மற்றும் முந்திரி, சுக்கு,ஏலக்காய் நெய் கலவைகளுடன் செய்தது .
17. சிறுதானிய கார வகைகள் :
குதிரைவாலி காரச்சேவு , குதிரைவாலி முறுக்குசேவு, வரகு முறுக்குசேவு, வரகு மிக்சர், வரகு காரச்சேவு, வரகு சீவல், கேழ்வரகு மிக்சர், கேழ்வரகு சேவு, சாமை மிக்சர் போன்ற காரவகைகள் செக்கு கடலை எண்ணெய்யில் செய்யப்பட்டும்.
18. கருப்பட்டி இனிப்பு வகைகள் :
1. நவதானிய கருப்பட்டி அல்வா :
2. கருப்பட்டி ஜிலேபி
3. கருப்பட்டி மிட்டாயி ( தேன்குழல் மிட்டாய்)
4. கருப்பட்டி இனிப்பு சேவு
5. வாசனை சீரகசம்பா
6. திரிகடுகம் கடலை மிட்டாய்
7. திரிகடுகம் மாப்பிள்ளை சம்பா அவல் பொரி மிட்டாய்
8. திரிகடுகம் பொரிகடலை மிட்டாய்
19. சேமியா வகைகள் : (1கிலோ)
1. வரகு, சாமை,குதிரைவாலி, தினை, நாட்டுக்கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கீரை சேமியா வகைகள்
20. கூழ்வடாகம் :
குள்ளகார் சிகப்பரிசி கூழ்வடாகம்
20. நெல்லித் துருவல் :


இயற்கை முறையில் விளைந்த சப்போட்டா மாம்பழம் :
தற்போது விருதுநகர் மாவட்ட இயற்கை உழவர் கூட்டமைப்பின் ( தேன்கனி உழவர் சந்தையில் ) ” தாலமுத்து வாழ்வியல் பண்ணையில் ” இயற்கை முறையில் விளைந்த சப்போட்டா மாம்பழம் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளது.
காயாகவோ அல்லது நடுத்தரமாக பழுத்த நிலையில் உள்ள மாம்பழத்தை அட்டைப்பெட்டியில் அனுப்பி வைக்கிறோம். பேக்கிங் சார்ஜ் மற்றும் போக்குவரத்து செலவு உங்களுடையது.
தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு : முத்துக்குமார் 978764 8002
தேன்கனி உழவர் சந்தை, சிவகாசி.