Wednesday, July 19, 2017

தேன்கனி இயற்கை விவசாயி கனகசபாபதி


Image may contain: 2 people, people smiling, text, outdoor and nature

ஆடிப்_பட்டத்துக்கு_ஏற்ற_சேனைக்கிழங்கு!

( தேன்கனி இயற்கை விவசாயி கனகசபாபதி )
நன்றி : பசுமை விகடன்
இ.கார்த்திகேயன்
மகசூல்இ.கார்த்திகேயன் -
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்
#வறுவல், பொரியல், துவையல், சாப்ஸ், வடை, கட்லெட், மசியல், ரோஸ்ட், சிப்ஸ், குழம்பு... எனப் பலவித சுவையான உணவு வகைகளைச் சேனைக்கிழங்கு கொண்டு சமைக்க முடியும். திருமணம் முதலான நிகழ்வுகளில் படைக்கப்படும் சைவ விருந்துகளில் சேனைக்கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. உண்பவர்களைச் சுவையில் திளைக்க வைக்கும் சேனைக்கிழங்கு, அதை விளைவிப்பவர்களையும் வருமானத்தில்திளைக்க வைக்கிறது. ‘தேவையைப் பொறுத்து எப்போது வேண்டுமானாலும் அறுவடை செய்யலாம் என்பதோடு, அறுவடைசெய்த கிழங்குகளை நீண்ட நாள்கள் வரை சேமித்து வைக்கலாம்’ என்பதுதான் சேனைக்கிழங்கின் சிறப்புகள். இக்கிழங்குக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதால், பலர் இதை ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்து வருகிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கனகசபாபதி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுந்தரராஜபுரம் எனும் கிராமத்தில் கனகசபாபதியின் தோட்டம் இருக்கிறது. சேனைக்கிழங்கு அறுவடைப் பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனகசபாபதியைச் சந்தித்துப் பேசினோம்.
“பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு வேலைக்குப் போனேன். பத்து வருஷம் வேலை பார்த்துட்டு, இப்போ சொந்தமா பிரஸ் வெச்சு நடத்திக்கிட்டு இருக்கேன். விவசாயம் குடும்பத் தொழில்ங்கிறதால அதையும் விடாம செஞ்சிட்டு இருக்கேன். முன்னாடி காய்கறி, சேனைக் கிழங்குனு பயிர் பண்ணிட்டு இருந்தோம். அதுக்கு ரசாயன உரத்த அடியுரமா போடுவோம். பூச்சி தாக்குனா அடுப்புச் சாம்பலைத் தூவி விடுவோம். வேற எதுவும் செய்யமாட்டோம். என் மனைவிக்குச் சிகிச்சை எடுக்கிறதுக்காக, நாலு வருஷத்துக்கு முன் ஓர் உளவியல் மருத்துவர்கிட்ட போனோம். அவர்தான் பாரம்பர்ய இயற்கை உணவுகள் பத்தியும் இயற்கை விவசாயம் பத்தியும் சொன்னார். அதோட, இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்கிற கருப்பசாமியையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

Image may contain: 3 people, people smiling, outdoor and nature
கருப்பசாமி, வானகத்துல நம்மாழ்வார் ஐயாகிட்ட பயிற்சி எடுத்தவர்.கருப்பசாமிகிட்டதான், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, பூச்சிவிரட்டி தயாரிப்பு, பலதானிய விதைப்புனு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். அவர்தான் எனக்குப் ‘பசுமை விகடன்’ புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார். பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகு, பலதானிய விதைப்பு செஞ்சு நிலத்தை வளப்படுத்தி... காசினி கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, பாலக்கீரைனு 10 கீரை வகைகளைச் சாகுபடி செஞ்சேன்.
எல்லாமே நல்லா விளைஞ்சது. அடுத்து 20 வகைக் கீரைகளையும் தக்காளியையும் சாகுபடி செஞ்சேன். அதுலேயும் நல்ல மகசூல் கிடைச்சது. அதுக்குப் பிறகுமுழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். இப்போ நாலு வருஷம் ஆகுது. போன ஆடிப்பட்டத்துல இயற்கை முறையில சேனைக்கிழங்கை நடவு செஞ்சேன்.
அதுதான் இப்போ அறுவடையாகிட்டு இருக்கு” என்ற கனகசபாபதி, அறுவடை செய்த சேனைக் கிழங்குகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார். “இது மொத்தம் நாலரை ஏக்கர். முழுக்கவே கரிசல் மண்தான். எட்டு வருஷத்துக்கு முன்னாடி அரை ஏக்கர் நிலத்துல தென்னை போட்டேன். அடுத்த அரை ஏக்கர் நிலத்துல அகத்தி, முருங்கையை நட்டிருக்கேன்.60 சென்ட் நிலத்துல சேனைக்கிழங்குபோட்டிருக்கேன். இதுல 10 சென்ட் நிலத்துல விதைக்கிழங்குக்காக விரலிக்கிழங்குகளை நட்டிருக்கேன்.மீதி நிலத்தைக் கீரைகள், சிறுதானியங்கள் போடுறதுக்காகத் தயார்ப்படுத்தி வெச்சிருக்கேன். முன்பெல்லாம் ரசாயன உரம் போட்டுதான் சேனை சாகுபடி செஞ்சேன்.இந்தமுறை முதல் முறையா இயற்கையில் சேனைக்கிழங்கு சாகுபடி செஞ்சிருக்கேன். நான் எதிர்பார்த்ததைவிட நல்லாவே வந்திருக்கு” என்ற கனகசபாபதி, நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.
“பொதுவாவே சேனைக்கிழங்கை நீண்ட நாட்களுக்குச் சேமிச்சு வைக்க முடியும். இயற்கை முறையில் விளைவிச்சா 10 மாசம் வரை வெச்சிருக்கலாம். பிறகு நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம். சிவகாசியில் இயற்கை விவசாயிகள் சேர்ந்து நடத்துற ‘தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை’யில் கிழங்கை விற்பனை செய்றேன். ஒவ்வொரு வாரமும் ஞாயித்துக்கிழமை மட்டுமே நடக்கிற இந்தச் சந்தையில நல்ல விலை கிடைக்குது. தேவைக்கேத்தபடி கிழங்குகளை அறுவடை செய்றேன்.இதுவரை 1,240 கிலோ கிழங்கை அறுவடை செஞ்சிருக்கேன். ஒரு கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா 49,600 ரூபாய் வருமானமா கிடைச்சிருக்கு. இன்னும் 2,400 கிலோ வரை கிழங்கு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதையும் அறுவடை செஞ்சு, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 96 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் 50 சென்ட் நிலத்துல இருந்து 1,45,600 ரூபாய் கிடைச்சுடும். விதைப்பில் இருந்து அறுவடை வரைக்கும் மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதைக் கழிச்சா எப்படியும் 85,600 ரூபாய் லாபமா நிக்கும். அடுத்த முறை விதைப்புக்கு இங்கேயே கிழங்கு கிடைக்கிறதால, அடுத்த போகத்துல இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும்”என்று சொல்லிச் சந்தோஷமாக விடைகொடுத்தார்.தொடர்புக்கு,கனகசபாபதி,செல்போன்: 94431 56003
#ஆடிப்_பட்டம்_ஏற்றது!
அரை ஏக்கர் நிலத்தில் சேனைக்கிழங்கு சாகுபடி செய்வது குறித்துக் கனகசபாபதி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...சேனைக் கிழங்கு சாகுபடி செய்ய சித்திரை, ஆடிப் பட்டங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் ஏற்றவை. சேனைக்கிழங்கின் வயது 8 முதல் 10 மாதங்கள்.தேர்வு செய்த அரை ஏக்கர் நிலத்தில், சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காயவிட வேண்டும்.ஆனி மாதம் 2 டன் தொழுவுரத்தை நிலத்தில் கொட்டிப் பரப்பி விட வேண்டும். பிறகு உழவு செய்து 15 நாட்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். மறுநாள் 5 அடிஅகலம் 8 அடி நீளத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்குள்ளும் ஓர் அடி இடைவெளியில் அரை அடி ஆழத்தில் குழிஎடுக்க வேண்டும். ஒரு பாத்தியில் 32 குழிகள் எடுக்கலாம். அரை ஏக்கர்பரப்பில் ஊன்ற 600 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும். ஒரு முழு விதைக்கிழங்கை நான்கு, ஆறு, எட்டு என எத்தனை துண்டுகளாக வேண்டுமானாலும் வெட்டி நடவு செய்யலாம். ஆனால், வெட்டும்போது கிழங்கின் நடுப்பகுதியில் உள்ள முளைப்புப் பகுதி, அனைத்துத் துண்டுகளிலும் இருக்குமாறு பார்த்து வெட்ட வேண்டும். முளைப்புப்பகுதி இல்லாவிட்டால் முளைக்காது.பிறகு ஒரு குழிக்கு ஒரு துண்டு கிழங்கு வீதம் ஊன்ற வேண்டும். ஊன்றும் கிழங்கு விரலிக்கிழங்காக இருந்தால், குழிக்கு இரண்டு கிழங்காக ஊன்ற வேண்டும். விதைத்த அன்று தண்ணீர் கொடுக்க வேண்டும். சேனைச் சாகுபடிக்கு நிலம் எப்போதுமே ஈரப்பதமாக இருக்க வேண்டும். ஆனால், நிலத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது. அதிகமாகத் தண்ணீர் தேங்கினால் கிழங்கு அழுகிவிடும். தண்ணீர் கட்டுவதைவிட வடிப்பதுதான் முக்கியம்.கிழங்கு ஊன்றிய அடுத்த நாள்... நாட்டுச்சோளம், நாட்டுக்கம்பு, தினை, குதிரைவாலி, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, துவரை, எள், நிலக்கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி, மல்லி, கடுகு, வெந்தயம், சோம்பு, தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி, கானம் ஆகியவற்றைக் கலந்து விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையிலும் 1 கிலோ அளவு என மொத்தம் 20 கிலோ விதைகளைக் கலந்து பரவலாகத் தூவி, தண்ணீர் விட வேண்டும். இவற்றில் பூவெடுக்கும் சமயத்தில் அறுத்து, அந்தந்த இடத்திலேயே போட்டுவிட வேண்டும். இவை, நிலத்துக்கு மூடாக்காகவும் அடியுரமாகவும் இருந்து மண்ணை வளப்படுத்தும். களைகளும் கட்டுப்படுத்தப்படும்.விதைத்த 40 நாள்களுக்குப்பின் சேனைக்கிழங்கு கூம்பு வடிவில் முளைவிட்டு வெளியில் வரும். விதைத்த 120-ம் நாளுக்கு மேல் தளிர் (பக்கத்தண்டு) வரும். அந்த நேரத்தில் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். மண் அணைத்த மறுநாள் 40 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 500 கிலோஆமணக்குப் பிண்ணாக்கு, 100 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் தூரிலும்ஒரு கைப்பிடியளவு வைக்க வேண்டும். தொடர்ந்து அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். விதைத்த 180-ம் நாளுக்கு மேல் மூன்றாவது தளிர் வரும். விதைத்த 7-ம் மாத இறுதியில் தண்டுகள் காய ஆரம்பிக்கும். விதைத்த 8-ம் மாதம் தண்டுகள் முழுவதும் காய்ந்து வளைந்துவிடும். இப்படித் தண்டுகள் பழுத்துத் தானாக மடங்கினால் கிழங்கு அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். இயற்கை முறையில் சாகுபடிசெய்வதால் நோய்கள், பூச்சிகள் தாக்குவதில்லை. 8-ம் மாதத்திலிருந்து தேவையைப் பொறுத்து அறுவடை செய்யலாம்.
#விரலிக்கிழங்கே_விதைக்கிழங்கு!
“அறுவடை செய்த சேனைக் கிழங்கிலிருந்து தனியாக நீட்டிக் கொண்டிருக்கும் சின்னக் கிழங்குதான் விரலிக்கிழங்கு. இதைத் தனியே எடுத்துச் சேகரித்து வைத்து, விதைக்கிழங்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சேனைக்கிழங்கு ஊன்றும்போதும்தனியாகக் குறைந்த இடத்துல இந்த கிழங்கைச் சாகுபடி செய்துவந்தால், அடுத்த முறைக்கான விதைக்கிழங்காக இதையே பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் விதைக்கிழங்குச் செலவு மிச்சமாகும். மேலும், நாமே விதைக்கிழங்கை உற்பத்தி செய்யும்போது தரமாகவும் மண்ணின் தன்மைக்கு ஏற்றதாகவும் இருக்கும். வெளியில் வாங்கி நடவு செய்தால், முளைப்புத்திறனைத் தெரிந்துகொள்ளவே பல நாள்கள் ஆகும்”என்கிறார் கனகசபாபதி.
கனகசபாபதி.
9443156003

Thursday, May 25, 2017

இளம் இயற்கை விவசாயி தேன்கனி திரு.முனியசாமி அவர்களின் வானொலி நிகழ்வு



மாற்றம் என்பது சொல் அல்ல...செயல்...

இளம் இயற்கை விவசாயி

தேன்கனி திரு.முனியசாமி 

அவர்களின் வானொலி நிகழ்வு

மாறிவரும் நகரமயமாதலில் வரையறுக்கப்பட்ட வாழ்கை முறையை அனைவரும்  பின்பற்றி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்களிடமிருந்து சற்று நகர்ந்து வாழ்பவர்கள் தான் முன்னோடிகளாக மாறியுள்ளனர்.
என்பதை மெய்பிக்கும் முகமாக தனது வாழ்க்கை முறை இயற்கையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பவர் தான்

விருதுநகர் மாவட்ட  தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின்
இளம் இயற்கை விவசாயி திரு.முனியசாமி....

பள்ளி பருவத்தைக் கடந்ததும்,கல்லூரி.
கல்லூரி பருவத்தைக் கடந்ததும்,அலுவலகம்.
அலுவலகத்தை அணி தொடர்ந்து குடும்பம்
என மனிதர்கள் போய் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் தன் பார்வை இயற்கை என்னும் அண்டத்தை தன் குடும்பமாக பாவித்து அதனுடன் தன் வாழ் நாளை ரசித்து கொண்டு இருக்கிறார் திரு.முனியசாமி......

இவர்  வளர்ந்து கொண்டு இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு முன்னோடியாகவும்,
 தனக்காக மட்டுமல்லாது இயற்கையின் மடியில் தவழ விரும்பும் அனைத்து அன்பருகளுக்குமாக,
தன்னுடைய முதல் அடியை கால சுவடுகளாக மாறும் விதமாக பயணித்து கொண்டு இருக்கிறார்...

இவருடைய பயணத்தின் பார்வையையும் , பார்வையின் ஆழத்தையும்,
ஆழத்தில் கண்ட அமிழ்த்தையும்  நம்முடன் வானொலி மூலமாக பகிர்ந்து கொண்டார்.....

இவருடைய இயற்கை பயணத்தில் இப்பொழுது நாமும் இவரின் வார்த்தைகளுடன் சிறிது தூரம் பயணிப்போம் இக்காணொளி வாயிலாக.....
காணொளி பகுதி 01:-


காணொளி பகுதி 02:-





இவருடைய பயணத்தின் சுவடுகளை அறிய

https://www.facebook.com/kumaran.well.5

முனியசாமி இயற்கையின் அன்பிற்க்குரியவன்






Saturday, April 29, 2017

கால்காணி இயற்கை விவசாயப் பயிற்சி

சிவகாசியில் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி & நிரந்தர வேளாண்மை பயிற்சி :
(கால்காணி இயற்கை விவசாயப் பயிற்சி )

கால்காணி என்பது 33 செண்ட் கொண்ட நிலத்தில் ஒரு குடும்பம் தனக்கான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என உணவு மற்றும் அடிப்படை வாழ்வாதரங்களை மிகக் குறைவான உழைப்பில் உருவாக்கிக் கொள்ள முடியும். இதில் தனக்கான வீடு, கால்நடைகளும் அடங்கும்.
இதை உணந்த நமது முன்னோர்களின் விவசாயம் என்பது வாழ்க்கை முறையாக இருந்தது. ஆனால் இன்று அது ஒரு வணிக முறை ( Agri Business ) ஆகி விட்டது. இதன் காரணமாக உண்ணும் உணவு நஞ்சானது.
இதிலிருந்து மீள பலரும் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வாழ்க்கைப் பாதையில் முழுமையான மகிழ்ச்சி வேண்டுமெனில் நாம் செய்யும் விவசாயம் என்பது தற்சார்பு உடைய வாழ்வியலாக மாற வேண்டும். இதற்கான சோதனைப் பண்ணையை தேன்கனி கால்காணி விவசாயப் பண்ணை உருவாக்கி உள்ளது.
இந்த வாழ்வியல் பண்ணையில் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை தொடர்ச்சியாக பகிர்ந்தும், பயிற்சி அளித்தும் வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக
தேன்கனியின் இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் உழவர்கள் இணைந்து 3நாள் களப் பயிற்சி ஏற்பாடு செய்துள்ளார்கள்.
பயிற்சி நாள் : மே 12 வெள்ளிக்கிழமை காலை 9மணி முதல் மே 14 ஞாயிறு மாலை 5மணி வரை
இப்பயிற்சியில்,
தற்சார்பு வேளாண்மை
• கால்காணி ஓர் அறிமுகம்
• நிரந்தர வேளாண்மை, காடு வளர்ப்பு
• விரிவான வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம்
( வீட்டு கழிவுகளைப் பயன்படுத்தி தயாரித்தல் )
• மானாவாரி பயிர் சாகுபடி
• இயற்கை உரங்கள், இடுபொருட்கள் தயாரிப்பு
• இயற்கை உணவு தயாரித்தல்
• உழவர் வாரச் சந்தையும், சந்தைப்படுத்துதலும் அறிமுகம்
• மேட்டுப்பாத்தி, மூடாக்கு, வட்டப்பாத்தி அமைத்தல் களப் பயிற்சி
• நாட்டுவிதைகள் பாதுகாப்பு, பரவலாக்கம்..
• கலப்புப் பயிர் சாகுபடி, பண்ணை வடிவமைத்தல் மற்றும் பல அனுபவப் பகிர்வுகள்
இப்பயிற்சியை தேன்கனி விவசாயக் கூட்டமைப்பின் அனுபவ விவசாயிகள் பயிற்சி அளிப்பார்கள்.
இடம் : தேன்கனி வாழ்வியல் மையம்,
சாமிபுரம் காலனி, சிவகாசி,
விருதுநகர் மாவட்டம்.
மாதிரிப்பண்ணைகள் : தேன்கனி ஆய்வுப்பண்ணை, தாழமுத்து வாழ்வியல் சோலை, தேன்கனி உழவர் சந்தை ...
பயிற்சி நன்கொடை : ரூ. 2000/-
பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி எண் :
Current A/c Name : Thenkani Natural Way Products Store
Bank Name : Indian Overseas Bank, Sivakasi.
A/C No : 349002000000182
IFSC Code : IOBA0003490
தங்குமிடம், இயற்கை உணவுகள் வழங்கப்படும்.
முன்பதிவு அவசியம்.
25நபர்களுக்கு மட்டுமே அனுமதி...
முன்பதிவிற்கு : 94435 75431, 96550 51239, 98431 27804, 99442 07220
இந்த எண்ணுக்கு தகவல் கூறிவிட்டு தங்களது முகவரியை
thenkanivalviyalmaiyam@gmail.com என்கிற மின்ன்ஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
புகைப்படங்கள் : தேன்கனியின் கால்காணிப் பண்ணை & மாடித் தோட்டம்
பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

Tuesday, March 14, 2017

தேன்கனி உழவர் சந்தை பற்றி திரு.குமார் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்


தேன்கனி உழவர் சந்தை பற்றி திரு.குமார் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய நீயின்றி அமையாது உலகு என்ற நிகழ்ச்சியில் வானகத்தின் அறங்காவலர் திரு.குமார் அவர்கள் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தும் முறையை நம் சிவகாசியில் இயங்கி வரும் தேன்கனி உழவர் சந்தை நடைபெறும் முறை வாயிலாக எடுத்து கூறி விளக்கினார்....நன்றி திரு.குமார் மற்றும் புதிய தலைமுறை....

Tuesday, January 24, 2017

மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி:


பாரம்பரிய பொங்கல் விழாவில் மெடோஸ் பள்ளி மாணவ,மாணவிகளின் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. 
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் தன்முனைப்பு மிகவும் பாராட்டதக்கது.

பல்வேறு கலை மீட்டெடுக்க இவர்களின் செயல்பாடுகள் நம்மை நெகிழ்ச்சியடைய செய்தது....மாணவர்களுடன் இவருடைய உறவு ஒரு நல்ல குரு சிடர்களின் உறவை போன்றதாகவே வெளிப்பட்டது...

இப்பள்ளியால் மீட்டெடுக்கப்பட்ட கலைகள்   பின்வருமாறு:

ஒயிலாட்டம்
பறை இசைத்தல்
சிலம்பாட்டம்
புலியாட்டம்
களியாட்டம்
நாடகம் அரங்கேற்றல்
நாட்டுப்புற நடனம்
நாட்டுப்புற பாடல்
கும்மிப்பாட்டு
உறியடித்தல்
இன்னும் பல....


இவையனைத்தும் கற்க வழிவகை செய்துவிட்டு மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மகிழும் தலைமையாசிரியரின் மாண்பு ஒரு நல்லாசியர் என்பதை பறைசாற்றுகிறது.....





நாட்டுப்புற நடனம்


புலியாட்டம்



 ஒயிலாட்டம்


தன் மாணவர்களுடன் தலைமையாசிரியர்

புலியாட்டம்


 சிலம்பாட்டம்




உறியடித்தல்



களியாட்டம்



தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வு

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வு:


குழந்தைகளுக்கான மற்றொரு நிகழ்வாக அமைந்தது....சூல் என்னும் சூழலயில் புத்தகத்தின் படைப்பாளர் திரு.தர்மர் அய்யாவின் கலகல்ப்பான கதை சொல்லும் நிகழ்வு....

இந்நிகழ்வில் குழந்தைகளுக்கான மாற்று சிந்தனையை வளர்க்க கூடிய பல்வேறு கதைகள் சொல்லப்பட்டது....இக்கதையின் சிறப்பாக பார்க்கப்பட்டது என்னவென்றால் கதையின் முடிவிலிருந்து புது புது கதைகளை உருவாக்கும் சிந்தனைகளை குழந்தைகளுடன் புதுப்புது கதைகளுடன் பகிர்ந்து கொண்டார். மாணவர்களும் ஆர்வத்துடன் கேட்டு புதுப்புது கதைகளையும் உருவாக்கி மகிழ்ந்தனர்....


திரு.தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வின் ஒளி,ஒலிப்பதிவு:






பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாடல்கள்

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாடல்கள்


பாரம்பரிய பொங்கல் விழாவில் மாணவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுகளின் நினைவுட்டல் மற்றும் பல்வேறு பாடல்கள் வானகம் திரு.செந்தில் அவர்களால் மாணவர்களுடன் கூடி மகிழ்வடைந்த நிகழ்வு நடைப்பெற்றது, மேலும் மாணவர்களின் நினைவு திறனை மேம்படுத்தும் மிக நீண்ட பாடல் வாய்வழியாகவும்,கைசைகைகளுடன் பாடப்பெற்றது.. மாணவர்கள் தங்களுக்குள் விளையாடியும் மகிழ்ந்தனர்...

ஒளி,ஒலிப்பதிவு:





பண்டைய பாரம்பரிய பயன்பாட்டு பொருட்களின் மீட்டல் நிகழ்வு

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


பண்டைய பாரம்பரிய பயன்பாட்டு பொருட்களின் மீட்டல் நிகழ்வு:


  தேன்கனி  பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது நம்முடைய பண்டைய பாரம்பரிய பொருடகளின் கண்காட்சி...இந்நிகழ்விற்க்காக மெடோஸ் பள்ளியின் மாணவர்களின் பங்கு அளப்பறியது...இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்ப்ட்ட அனைத்துப் பொருட்களும் அந்த மாணவர்களின் வீட்டு மச்சியிலிருந்து எடுக்கப்பட்டவை என மாணவர்கள் கூறினர்.....

இக்கண்காட்சியில் நம் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக பல்வேறு பொருட்களும் அதனுடைய தொன்மையும்,வரலாற்றையும் தாங்கி நின்று நாம் கை நழுவ விட்ட பெருமையை தன்னகத்தே கொண்டு நிற்பதாகவே இருந்தது....





















தேன்கனி பாரம்பரிய பொங்கல் விழா

தேன்கனி முப்பெரும் விழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


தேன்கனி பாரம்பரிய பொங்கல் விழா:


விருதுநகர் மாவட்ட தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் சார்பாக கடந்த பொங்கலன்று சிவகாசி எம்.புதுப்பட்டி அமைந்துள்ள மெடோஸ் மேனிலைப் பள்ளியில் மாணவர்களுடனும் இயற்கை ஆர்வலர்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்ப்ட்டது.....
இவ்விழாவில் தேன்கனி அமைப்பின் அங்கத்தினரும்,இயற்கை ஆர்வலர்களும்,சிறப்பு அழைப்பாளர்களும், மெடோஸ் பள்ளியின் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்....

பாரம்பரிய பொங்கல் விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது...

1.பாரம்பரிய பொங்கல் வைக்கும் நிகழ்வு
2.பண்டைய பாரம்பரிய பயன்பாட்டு பொருட்களின் மீட்டல் நிகழ்வு
3.பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாடல்கள்
4.தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வு
5.மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி

1.பாரம்பரிய பொங்கல் வைக்கும் நிகழ்வு:

         

பொங்கலன்று காலை இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய தானியமான “குதிரைவாலி” தானியத்தில் மண்டை வெல்லத்துடன் இனிப்பான பொங்கல் பொங்க பொங்கல் விழா தொடங்கியது...







பொங்கல் பொங்கும் பொழுது அனைத்து அன்பர்களும் மகிழ்ச்சி பொங்க பறை இசை சூழ மகிழ்ச்சி ஆரவாரித்தனர்.

பொங்கல் நிகழ்வின் ஒலி.ஒளிப்பதிவு:

                           





அனைத்து அன்பர்களுக்கும் பாரம்பரிய பொங்கல் பரிமாறப்பட்டது....
அனைவரும் பாரம்பரிய பொங்கலின் சுவையை சுவைக்கும் பொழுது








தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி முப்பெரும் விழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


தேன்கனி 150 வது உழவர் சந்தை விழா:

                       
                விருதுநகர் மாவட்ட தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் அங்கமான தேன்கனி உழவர் சந்தை கடந்த 150 வாரங்களாக செயல்பட்டுவருகிறது.150 வது தேன்கனி உழவர் சந்தை விழா கடந்த பொங்கல் அன்று சிவகாசி எம்.புதுப்பட்டி அமைந்துள்ள மெடோஸ் மேனிலை பள்ளியில் தேன்கனியின் முப்பெரும் விழாவாக கொண்டாப்பட்டது.....



விழாவில் இயற்கை வழி விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நமது 

பாரம்பரிய தானியங்கள் 

சிவப்பு அரிசி வகைகள்
கைகுத்தல் அரிசி வகைகள்
செக்கு எண்ணெய் வகைகள்
அவல் வகைகள்

பாரம்பரிய திண்பண்டங்கள்

சிறுதானிய காரவகைகள்
சிறுதானிய இனிப்பு வகைகள்
திரிகடுகம் கடலை மிட்டாய்
நவதானிய அல்வா

இயற்கை வழியில் விளைந்த
காய்கறிகள்
பழங்கள்   சந்தைப்படுத்தப்பட்டது

மாடிதோட்டம் பற்றிய விழ்ப்புணர்வு:



இவ்விழாவில் மாடித்தோட்டம் அமைத்தல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது

மாடித்தோட்டத்திற்க்கு தேவையான

பைகள்
விதைகள் மற்றும்

இயற்கை பூச்சிவிரட்டிகள்

பற்றிய விழ்ப்புணர்வு வழங்கப்பட்டது...



நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா:

இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வாரின் நினைவுநாள் தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் சார்பாக சிவகாசி எம்.புதுப்பட்டியில் அமைந்துள்ள மெடோஸ் மேனிலை பள்ளியில் தேன்கனியின் முப்பெரும் விழாவாக கொணடாப்பட்டது......
இவ்விழாவில் நம்மாழ்வார் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றையும் அய்யாவின் அனுபவங்களையும் குழந்தைகளுக்கு புரியும் பக்குவத்தில் குழந்தை மொழியில் கலந்துரையாடினார் வானகத்தின் குழந்தை கல்விய்யில் பயிற்றுனர் திரு.வானகம் செந்தில் அவர்கள்


மேலும் அய்யாவின் புகைப்படத்துடன்கூடிய அய்யாவின் கருத்துகளை மாணவர்களின் பார்வைக்கும் பொது மக்களின் மனபதிவிற்காக காட்சிப்படுத்தப்பட்டது.....மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்தபோது......