Saturday, December 9, 2023

 *#தேன்கனி மரபு அறுசுவையகம் நடத்தும்*

*#மதிப்புக்கூட்டுதல், #சந்தைப்படுத்துதல் &*

*#இயற்கை வாழ்வியல் மூன்றுநாள் பயிற்சி :*

நாள் : *29-12-23 வெள்ளி முதல் 31-12-23 ஞாயிறு வரை*


*இடம் : #கீதா_வாழ்வியல்_மையம், சிவகாசி.*


*#நம்மாழ்வார் ஐயா 2013ல் சிவகாசியில் நடந்த மதிப்புக்கூட்டல் பயிற்சியில் கூறியது*


    இரசாயன வேளாண்மை மற்றும் நவீன உணவு, மருத்துவத்தின் விளைவால் இன்று தீராத பல நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். *பிறக்கும் குழந்தை தொடங்கி, பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் இரத்த சோகையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் விளைவால் நோயிலிருந்தும் மீள முடியாமல் பெரும் கடன் சுமைக்கு ஆளாகி குடும்பமே நிம்மதியற்ற வாழ்வு வாழ்கிறார்கள்.*


           இக்கொடுமைகளிலிருந்து *விடுபட நம் முன்னோர்கள் கடைபிடித்த இயற்கை வேளாண்மையும், உணவு முறைகளும், வைத்திய முறைகளுமே போதுமானதாக உள்ளது.* இன்று நாடு முழுவதும் நோய்களுக்கு உள்ளானவர்கள் இந்த எளிய வாழ்வியல் முறைகளை கடைபிடித்து ஆரோக்கிய வாழ்வு வாழ்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து கிடைத்த அனுபவங்களை பரவலாக்கம் செய்ய வேண்டும். அதன்பின்


             *ஒவ்வொரு உழவரும் தான் விளைவிக்கும் பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நேரடியாகவும் சந்தைப்படுத்த வேண்டும். அப்போது தான் உழவரும் நல்லாயிருப்பார். வாங்கி உண்பவரும் நல்லாயிருப்பார்.*

 

          மேலும் *பெண்களையும், வயதானவர்களையும் பொருளாதரத்தில் உயர அவர்களுக்கும் சுயதொழில் வேலைவாப்புகளை உருவாக்க வேண்டும்.*


          *இக்கருத்தை அடித்தளமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் “ #தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை “.*


         *2014ல் #நம்மாழ்வார் ஐயாவோடு பயணித்தவர்களால் துவங்கப்பட்ட “ தேன்கனி இயற்கை உழவர் வாரச் சந்தை”. இச்சந்தை கடந்த 10ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிறும் சிவகாசியை மையமாக வைத்து அருகிலுள்ள இயற்கை உழவர்களால் இன்றுவரை நடத்தப் பட்டுவருகிறது. இச்சந்தையை #தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பினர் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.*


            இதன் முக்கிய நோக்கமாக நஞ்சில்லாமல் இயற்கை  வழியில் பல்லுயிர்களுக்கமான உணவு உற்பத்தி தொடங்கி, அது உழவர்களாலே நேரடியாக சந்தைப்படுத்தப் பட  “ ஊர்தோறும் உழவர்களின் சந்தைகள் என விரிவடைந்து கொண்டே இருக்கிறது.  மேலும் விதை தொடங்கி , வேளாண்மைக்கான அனுபவங்கள், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல்வேறு பணிகளை கூட்டாக நடத்தி வருகிறோம்.


           *மேலும் களத்தில் எங்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்கும் நோக்கில் #பயிற்சி வகுப்புகளாக 2012 முதல் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வருகிற #டிசம்பர் 29ம் தேதி முதல் 31,2023 வரை விரிவான சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்துள்ளோம்.* 


*இப்பயிற்சியில் *

⚫ வீதியெங்கும் தேவை இயற்கை #உணவகம் & ஆடம்பரமில்லா இயற்கை #அங்காடி அமைக்க பயிற்சி... 


⚫ #அடுப்பில்லா சமையல் & #கிராமத்து சமையல், மூலிகை பானங்கள் & சாறு தயாரிப்பு செய்முறை பயிற்சி ...   


⚫  கருந்(சிறு)தானிய & #மரபு அரிசிகளில் உணவு, பலகாரங்கள் தயாரிப்பு & #மதிப்புக்கூட்டல் உட்பட வீட்டிலே சுய தொழில்களுக்கான விரிவான பயிற்சி...  


⚫  ஊர்தோறும் ஊர் #சந்தைகள் தொடங்க வழிகாட்டுதல்...    


⚫ வீட்டுத் #தோட்டம் & மாடித் தோட்டம், மரபு #விதை & #கால்காணி வேளாண்மை ...


⚫ உணவின் வழியே #இயற்கை வைத்தியமும், நோய்களை குணமாக்குதலுக்கான இயற்கை வாழ்வியல் பயிற்சிகள் ...   


⚫ #யோகா, புற்றுமண் குளியல், மரபு விளையாட்டுக்கள், பண்ணையில் களப்பணிகள் உட்பட பல விரிவான பயிற்சிகள்... 


#பயிற்சி நடைபெறும் இடம் :

*#கீதா இயற்கை வாழ்வியல் மையம்*,

பாறைப்பட்டி, சாத்தூர் சாலை, 

*#சிவகாசி. விருதுநகர் மாவட்டம்*.*


*பயிற்சி பங்களிப்பு : ரூ. 2,400*/-

( தங்குமிடம், இயற்கை உணவுகள் வழங்கப்படும். )


**பணம் செலுத்த வேண்டிய வங்கி எண்*


*Gpay Narayanan 9655437242*

or 


*Current A/c Name :*

Thenkani Natural Way Products Store

Bank Name : Indian Overseas Bank, Sivakasi.

A/C No : 349002000000182

IFSC Code : IOBA0003490


முன்பதிவு அவசியம்.


*முன்பதிவிற்கு :* 

*+91 94435 75431*

*+91 96554 37242*

*+91 97876 48002*

*+91 90955 63792*


பயிற்சியின் இறுதியில் பங்கேற்புச் #சான்றிதழ் வழங்கப்படும்.


*கடந்த பயிற்சியின் பதிவுகள் காண* :

https://www.facebook.com/Thenkaniv.../posts/1958368844341574

https://www.facebook.com/karuppasamyvanagam/posts/2257854630933589

www.thenkanivalviyalmaiyam.blogspot.in

Facebook/thenkanivalviyalmaiyam/


*#தேன்கனி குழுவினரின் செயல்பாடுகளில் சிலவற்றை அறிய கீழுள்ள காணொளிகளைக் காணலாம்.*

https://www.youtube.com/watch?v=If12bPo0pTQ&t=69s

https://www.youtube.com/watch?v=GxvBWGla9Gs&t=10s

https://www.youtube.com/watch?v=gUSpcbr5bhE

https://www.youtube.com/watch?v=oUjfIZupdp4&t=1s

https://www.youtube.com/watch?v=yNSmdsVkuv0

https://www.youtube.com/watch?v=81raL4SbjSg

https://www.youtube.com/watch?v=3vJkNqt4tF4

www.thenkanivalviyalmaiyam.blogspot.com

www.facebook.com/Thenkanivalviyalmaiyam


#தேன்கனி #தற்சார்புபயிற்சி #நம்மாழ்வார் 


*இயற்கையோடு இணைந்து பல்லுயிர்சூழலில் வாழ்வோம்.*



நன்றி.

Monday, October 2, 2023

#ஒருங்கிணைந்த_வேளாண்மை_பண்ணை_வடிவமைப்பு:


பகிர்வு : க.அருண் சங்கர்

#பண்ணைவடிவமைப்பு
#அகழி

#நிலசீர்திருத்தம்

#மழைநீர்சேமிப்பு
#தேன்கனி

#பண்ணைக்குட்டை

மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் தற்போது பருவ காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் கோடைகாலங்களில் குளிர்ந்த பனிப்பொழிவு சூழலும் உள்ளது..

இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களிலும் உடலிலும் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்கின்றனர்.இவற்றில் இருந்து விடுபடுவதும் தற்காத்துக் கொள்வதற்காகவும் நிலம் உள்ளவர்கள் தங்களுடைய பழைய நிலங்களை மீட்டெடுத்தும் நிலம் இல்லாதவர்கள் புதிய நிலங்களை தேடியும் வருகின்றனர்.

அவ்வாறு நிலங்களை கையில் எடுத்தவர்கள் அவற்றை மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் உள்ளனர்.

உதாரணமாக #இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு,ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான புதிய முயற்சி நோக்கி தேடலை தொடர்கின்றனர்..
















தேடலின் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களிலும் நண்பர்களுடைய பண்ணைகளை பார்வையிட்டும் தாமும் அது போல் உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்..

இவற்றில் பண்ணை வடிவமைப்பு என்பது ஆரம்பத்தில் தெளிவற்ற புரிதலுடன் தவறுதலாக செய்துவிட்டால் பின்பு அவற்றை மாற்றி அமைப்பதும் சிரமமான ஒன்றாக மாறிவிடும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு #தேன்கனி குழுவினர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் வடக்கு முதல் தெற்கு வரை வெவ்வேறு விதமான சூழ்நிலையில் வெவ்வேறு விதமான பண்ணைகளை வடிவமைத்து கொடுத்துள்ளோம்.

ஐயா #நம்மாழ்வார் கூறியது போல் விவசாயம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடும் இந்த கூற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த நிலத்திற்கு ஏற்றார் போல் நிலம் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பண்ணைகளை சிறப்பாக வடிவமைத்து வெற்றியும் கண்டுள்ளோம்.

உதாரணமாக நிலங்களில் உயிர்வேலி அமைப்பது (சுற்றுச்சூழலுக்கு உகந்தது), வரப்புகளில் அகழி அமைப்பது, பனைக்குட்டை அமைப்பது, மழைநீர் தன்னுடைய நிலத்தை விட்டு வெளியில் செல்லாது போல் நிலங்களை மாற்றி அமைப்பது அந்தந்த சூழல் ஏற்றாற் போல் நாட்டு மரங்களை தேர்வு செய்து நடவு செய்வது, தண்ணீர் தேவைக்கேற்றது போல் சொட்டுநீர் அமைத்துக் கொடுப்பது போன்ற,மானாவரிக்கு ஏற்ற நிலங்களை வடிவமைப்பது,

இயற்கை விவசாயம்,இயற்கை வாழ்வியல்,தற்சார்பு வாழ்வியல்,கால்காணி விவசாயப்பயிற்சி, உடலேமருத்துவர், ஊர்திரும்புதல், இயற்கை உணவகம், இயற்கை விவசாய விளைப்பொருள் சந்தை, குழந்தைகள் பயிற்சி, வாழும் கிராமங்கள், கிராமங்களில் நீர்நிலைகள் புணரமைப்பது என எண்ணற்ற வேலைகளை தேன்கனி குழுவினர் நில உரிமையாளர்களின் விருப்பத்திற்கும்,பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அமைத்தும்,அதற்கான ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறோம்.

#பண்ணை வடிவமைப்பு முடிந்த பின்பு தொடர்ந்து நிலஉரிமையாளர்களிடம் பேசி தொடர்பு ஏற்படுத்தி கிடைக்கும் ஒய்வு நேரங்களில் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது என குழுவாக பயணிக்கிறோம்..

உப்பான கிணற்று நீரையும் விவசாயத்திற்கு ஏற்றாற்போல் தண்ணீராகவும் மாற்றியுள்ளோம்.
ஒன்றுக்கு பயன்படாத நித்தையும் மீட்டெடுத்து பலதானிய விதைப்புகளை முன்னெடுத்து பொன்விளையும் பூமியாக மாற்றியுள்ளோம்.

ஐயா #நம்மாவார் கூறியதை அனுதினமும் உள்வாங்கி தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் களஅனுபவங்களையும் மற்ற உழவர்களுக்கு கைமாத்தி அவர்களையும் தங்களில் ஒருவராக எண்ணி உடன் குழவாக இணைத்து தேன்கனி என்ற ஒரு மிகப்பெரிய விவசாய கூட்டமைப்பாக இயங்குகிறோம்..

தொடரும்......

பண்ணைவடிவமைப்புக்கு:
அ. நாராயணன்-96554 37242
ஜெ. கருப்பசாமி-94435 75431

Tuesday, April 25, 2023


#நம்மாழ்வார் (#வேம்பாழ்வார்)
சிவகாசியில் 85வது பிறந்தநாள் விழா :
*********************************************



          #வேம்பு_க்கான காப்புரிமையை பெற்றுத்தந்தவர் #வேம்பாழ்வார். #காப்புரிமை என்பது வணிக சுரண்டல். பெரும் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தங்களுக்கான லாபத்தை அதிகரிக்க தங்களுக்குள் கொண்டு வந்த ஒப்பந்தமே என்று உலகுக்கு எடுத்துரைவர் #நம்மாழ்வார். .
                                             
    அதன் நினைவைப் போற்றும் விதத்தில் சிவகாசியில் ஏப்ரல் 16,2023ல் #தேன்கனி உழவர் கூட்டமைப்பு “ #கீதா_வாழ்வியல்_மையம்” நம்மாழ்வார் ஐயா பிறந்தநாளை குழுவாக வேப்ப மரத்தடியில் கொண்டாடினோம்.


நிகழ்வில் ஐயாவுக்கு வேப்பிலையாலான மாலை அணிவிக்கப்பட்டு, பறைமுழங்க வணக்கம் செலுத்தினோம். 

#விதைகளே_பேராயுதம் :
*****************************
                      நம் மண்ணின் மரபு விதைகளே வறட்சி, வெள்ளம், மழை, புயல், பூச்சி & நோய்த்தாக்குதல்களை தாங்கி நம்மை காக்கும் என்கிற கருத்தை விதைத்த நம்மாழ்வார் ஐயாவிற்கு நிகழ்விற்கு வந்த உழவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த விதைகளையும், இயற்கை உணவுகளையும், கருத்துகளையும் படையலிட்டனர்.



பின்னர் தன்னிடம் இருப்பதை பகிர்ந்துவிட்டு இல்லாததை அனைவரும் எடுத்து சென்றனர்.
யார் இந்த #நம்மாழ்வார் ?

நிகழ்வின் மையப் புள்ளியான #நம்மாழ்வார் ஐயாவை ஏன்? கொண்டாட வேண்டும். அவரால் சமூகத்தில் நடந்த மாற்றம் என்ன? ஐயாவின் வாழ்வியல் எதிர்வரும் தலைமுறைக்கும் சாத்தியமா? என்கிற கேள்வியோடு உரையாடல் தொடங்கப்பட்து.

வழக்கமாக எல்லா நிகழ்வுகளிலும் #நம்மாழ்வார் ஐயாவோடு பயணித்தவர்கள் ஐயாவைப் பற்றி பேச அனைவரும் கேட்போம். ஆனால் இந்நிகழ்வில் ஐயாபற்றி நிகழ்விற்கு வந்தவர்கள் வாழ்ந்து உணர்ந்த கருத்துக்களை ஒரு உரையாடலாக கொண்டு சென்றோம்.

அதில் ஒவ்வொருவரும் ஐயாவைப்பற்றி வெளிப்படுத்திய கருத்துகள் சிறப்புவாய்ந்தவை. அவைகளில் ” #நம்மாழ்வார் மக்களின் மனசாட்சி “, எங்களை மனிதனாக்கியவர். விதைகளின் நாயகன், தன்னலமற்ற பொதுவுடமைவாதி, நஞ்சில்லா உணவை பல்லுயிர்களுக்கும் உறுதிபடுத்த உழைத்தவர், திருக்குறள் போன்று எக்காலத்துக்கும் பொறுந்தக்கூடிய வாழ்வியல் வழிகளை ஏற்படுத்துக் கொடுத்தவர், மரபுவழி மருத்துவத்தை ஒருங்கிணைத்தவர் என்றும், அன்றாட வாழ்வியலில் ஒவ்வொரு அசைவிலும் சுற்றுசூழல் மாற்றத்தை நிகழ்த்தியவர் என்றும், கிராமங்களை உயிர்பிக்க செய்தவர் என்றும் பல ஆச்சரியமூட்டம் கருத்துகள் வெளிப்பட்டது.

அதன்பின் ”கீதா வாழ்வியல் மையத்தில்(பண்ணை)” நடைபெறும் செயல்பாடுகளை அனைவரும் பார்வையிட்டு, நிகழ்விற்கு வந்த ஒவ்வொருவரையும், அவரின் செயல்பாடுகளையும், இனி நாம் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் விவாதித்து முடிவெடுக்கப் பட்டது.

#மாதாந்திர_நிகழ்வு :

அதன் அடிப்படையில் ”ஒவ்வொரு மாதமும் ஒருநாள் “ என்கிற அடிப்படையில் கிராமத்தில் குடும்பத்தோடு #தாத்தா, #பாட்டி வீட்டிற்கு செல்வது போல் ” அருகில் இருக்கும் இயற்கை வேளாண் பண்ணைக்கு சென்று சமூகமாக வாழ்தல் “. அந்நாளில் கூட்டாக இணைந்த நம்முடைய வருங்கால வாழ்விற்குத் தேவையான வழிமுறைகளையும் , வாழ்வியலையும் கூட்டாக கலந்துரையாடி கட்டமைப்புகளை உருவாக்குதல்.



அடுத்த 10ஆண்டுகளில் இப்பணியில் உள்ள குறை, நிறைகளை நீக்கி நாடுமுழுவதும் பரவலாக்க வேண்டும். அதன் மூலம் நம்மாழ்வார் விரும்பிய மாற்றம் சமூகத்தில் நிகழும். அது நம்மாழ்வார் ஐயா நமக்கு விட்டு சென்ற பணி என்கிற கருத்தோடு இம்முயற்சியை #தேன்கனி அமைப்பு அனைவரோடும் இணைந்து தொடங்கியுள்ளோம். அடுத்த மாதந்திர கூட்த்தில் இன்னும் விரிவாகப் பேசுவோம்…

நிகழ்வில் கல்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..