Tuesday, April 25, 2023


#நம்மாழ்வார் (#வேம்பாழ்வார்)
சிவகாசியில் 85வது பிறந்தநாள் விழா :
*********************************************



          #வேம்பு_க்கான காப்புரிமையை பெற்றுத்தந்தவர் #வேம்பாழ்வார். #காப்புரிமை என்பது வணிக சுரண்டல். பெரும் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தங்களுக்கான லாபத்தை அதிகரிக்க தங்களுக்குள் கொண்டு வந்த ஒப்பந்தமே என்று உலகுக்கு எடுத்துரைவர் #நம்மாழ்வார். .
                                             
    அதன் நினைவைப் போற்றும் விதத்தில் சிவகாசியில் ஏப்ரல் 16,2023ல் #தேன்கனி உழவர் கூட்டமைப்பு “ #கீதா_வாழ்வியல்_மையம்” நம்மாழ்வார் ஐயா பிறந்தநாளை குழுவாக வேப்ப மரத்தடியில் கொண்டாடினோம்.


நிகழ்வில் ஐயாவுக்கு வேப்பிலையாலான மாலை அணிவிக்கப்பட்டு, பறைமுழங்க வணக்கம் செலுத்தினோம். 

#விதைகளே_பேராயுதம் :
*****************************
                      நம் மண்ணின் மரபு விதைகளே வறட்சி, வெள்ளம், மழை, புயல், பூச்சி & நோய்த்தாக்குதல்களை தாங்கி நம்மை காக்கும் என்கிற கருத்தை விதைத்த நம்மாழ்வார் ஐயாவிற்கு நிகழ்விற்கு வந்த உழவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த விதைகளையும், இயற்கை உணவுகளையும், கருத்துகளையும் படையலிட்டனர்.



பின்னர் தன்னிடம் இருப்பதை பகிர்ந்துவிட்டு இல்லாததை அனைவரும் எடுத்து சென்றனர்.
யார் இந்த #நம்மாழ்வார் ?

நிகழ்வின் மையப் புள்ளியான #நம்மாழ்வார் ஐயாவை ஏன்? கொண்டாட வேண்டும். அவரால் சமூகத்தில் நடந்த மாற்றம் என்ன? ஐயாவின் வாழ்வியல் எதிர்வரும் தலைமுறைக்கும் சாத்தியமா? என்கிற கேள்வியோடு உரையாடல் தொடங்கப்பட்து.

வழக்கமாக எல்லா நிகழ்வுகளிலும் #நம்மாழ்வார் ஐயாவோடு பயணித்தவர்கள் ஐயாவைப் பற்றி பேச அனைவரும் கேட்போம். ஆனால் இந்நிகழ்வில் ஐயாபற்றி நிகழ்விற்கு வந்தவர்கள் வாழ்ந்து உணர்ந்த கருத்துக்களை ஒரு உரையாடலாக கொண்டு சென்றோம்.

அதில் ஒவ்வொருவரும் ஐயாவைப்பற்றி வெளிப்படுத்திய கருத்துகள் சிறப்புவாய்ந்தவை. அவைகளில் ” #நம்மாழ்வார் மக்களின் மனசாட்சி “, எங்களை மனிதனாக்கியவர். விதைகளின் நாயகன், தன்னலமற்ற பொதுவுடமைவாதி, நஞ்சில்லா உணவை பல்லுயிர்களுக்கும் உறுதிபடுத்த உழைத்தவர், திருக்குறள் போன்று எக்காலத்துக்கும் பொறுந்தக்கூடிய வாழ்வியல் வழிகளை ஏற்படுத்துக் கொடுத்தவர், மரபுவழி மருத்துவத்தை ஒருங்கிணைத்தவர் என்றும், அன்றாட வாழ்வியலில் ஒவ்வொரு அசைவிலும் சுற்றுசூழல் மாற்றத்தை நிகழ்த்தியவர் என்றும், கிராமங்களை உயிர்பிக்க செய்தவர் என்றும் பல ஆச்சரியமூட்டம் கருத்துகள் வெளிப்பட்டது.

அதன்பின் ”கீதா வாழ்வியல் மையத்தில்(பண்ணை)” நடைபெறும் செயல்பாடுகளை அனைவரும் பார்வையிட்டு, நிகழ்விற்கு வந்த ஒவ்வொருவரையும், அவரின் செயல்பாடுகளையும், இனி நாம் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் விவாதித்து முடிவெடுக்கப் பட்டது.

#மாதாந்திர_நிகழ்வு :

அதன் அடிப்படையில் ”ஒவ்வொரு மாதமும் ஒருநாள் “ என்கிற அடிப்படையில் கிராமத்தில் குடும்பத்தோடு #தாத்தா, #பாட்டி வீட்டிற்கு செல்வது போல் ” அருகில் இருக்கும் இயற்கை வேளாண் பண்ணைக்கு சென்று சமூகமாக வாழ்தல் “. அந்நாளில் கூட்டாக இணைந்த நம்முடைய வருங்கால வாழ்விற்குத் தேவையான வழிமுறைகளையும் , வாழ்வியலையும் கூட்டாக கலந்துரையாடி கட்டமைப்புகளை உருவாக்குதல்.



அடுத்த 10ஆண்டுகளில் இப்பணியில் உள்ள குறை, நிறைகளை நீக்கி நாடுமுழுவதும் பரவலாக்க வேண்டும். அதன் மூலம் நம்மாழ்வார் விரும்பிய மாற்றம் சமூகத்தில் நிகழும். அது நம்மாழ்வார் ஐயா நமக்கு விட்டு சென்ற பணி என்கிற கருத்தோடு இம்முயற்சியை #தேன்கனி அமைப்பு அனைவரோடும் இணைந்து தொடங்கியுள்ளோம். அடுத்த மாதந்திர கூட்த்தில் இன்னும் விரிவாகப் பேசுவோம்…

நிகழ்வில் கல்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..