Friday, October 14, 2016

தேன்கனி குடும்பநல திருவிழாவின் புகைப்படத் தொகுப்பு.....





Saturday, October 8, 2016

தேன்கனி வாழ்வியல் பள்ளி



ஊர் திரும்புதல் ( கிராமங்களை நோக்கி திரும்புதல் ) :

தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பு, வானகம் கல்விக்குழு, குக்கூ குழந்தைகள் வெளி, கரிசல் கலைக்குழு மற்றும் மரபுவிதை நாடோடிகள் அமைப்புகள் இணைந்து நடத்தும் ஊர் திரும்புதல் பயிற்சி ( முதல் முயற்சியாக 1 நாள் வாழ்க்கையை கிராம சூழலில் வாழ்தல்)

பாரம்பரிய வாழ்வியல் & கலைத் திருவிழா & தேன்கனி வாழ்வியல் பள்ளி துவக்க விழா : 

Teaching ( கற்றுக் கொடுத்தல்) :
Teaching என்பது தன்னிடம் உள்ளதை கற்று கொடுக்க (திணிக்க) முயலுதல்.
Learning (கற்றல்) :
Learning எனபது தன்னக்குள் எழும் கேள்வி மூலமாக தானாகவோ அல்லது மற்றவரின் துணை கொண்டு கற்றலாகும்.
கல்வி :
கல்வி என்பது எப்போதும் கற்றலாகவே (Learning) இருக்க வேண்டும். அதைத் தான்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
என்று வள்ளுவர் கூறுகிறார். அப்போது தான் அறிவு என்பது ஊற்று போல உள்ளிருந்து ஊறும்.
இதைத் தான் நம்மாழ்வார் ஐயாவும் கல்வி என்பது கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துதல். அந்த சூழல் எனப்து கற்பதற்குத் தேவையான மாதிரிகள் அடங்கியது. பின்னர் கற்ற விரும்புவர் அந்த சூழலில் தனக்குள் எழும் கேள்விகள் மூலம் விடைகளை கண்டு பிடிப்பார் . கற்றலுக்கான சூழலாகத் தான வானகத்தை நம்மாழ்வார் ஐயா உருவாக்கியுள்ளார்.

தேன்கனி வாழ்வியல் பள்ளி :

ஆகவே தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பானது தன்னுடைய 5கால தொடர் பயணத்தில் இயற்கை விவசாயிகள், பண்ணைகள், மரபு வைத்தியர்கள், கல்வியாளர்கள், மரபு கலைஞர்கள், கலைகள் , உணவியல் நிபுணர்கள் தொடங்கி வாழ்க்கைக்குத் தேவையானவர்களையும் , வாழ்வதற்கான சூழலையும் உருவாக்கியுள்ளது.

அத்தகைய உயிர்ப்பான சூழலில் குழந்தைகளும், பெற்றோர்களும் வாழ விரும்பும் போது அந்த அறிவையும், அனுபவத்தையும் கைமாற்றிக் கொடுக்க முடியும். இதன் அடிப்படையில் தேன்கனி வாழ்வியல் பள்ளிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை 4முறை நடத்தி உள்ளோம்.


அதன் முடிவில் தேன்கனி வாழ்வியல் பள்ளியை வருகிற அக்டோபர் 11ம் தேதி விஜயதசமி விடுமுறை நாளான செவ்வாய்க் கிழமை அதிகாலை நம்முன்னோர்களின் வாழ்வியலான கிராமத்து சூழலில் தொடங்க உள்ளோம். அன்றைய தினம் பெற்றோர்கள், குழந்தைகள் என இருவருக்கும் முதலில் தேன்கனி பள்ளி வாழ்வியல் குறித்து அனுபவப் பூர்வமாக உணர்த்த உள்ளனர்.


நிகழ்ச்சி நிரல் :

• அதிகாலை 5 மணிக்கு எழுதல்

• காலைகடன் கழித்து, ஆலும் வேலுமுடன் பல் துலக்கல்
• குளிர்ந்த கிணற்று நீரில் மண் & மூலிகை குளி(ர்)த்தல்
• சாணம் கரைத்து முற்றம் தெளித்து அரிசி மாவுக் கோலம்
• கால் நடைகளுக்கு உணவளித்து, தோட்டத்தில் கள வேலை செய்தல்
• சூரிய வணக்கத்துடன் யோகாப் பயிற்சி
• நாட்டுக் கம்பங்கூழும், அவல் சர்க்கரைப் பொங்கலும், முளைகட்டிய தானியமும், மூலிகை தேநீருடன் காலை உணவு
• கும்மியாட்டத்துடன் மரக்கன்று நட்டு குழந்தைகள் கையால் தேன்கனி வாழ்வியல் பள்ளி துவக்குதல்
• பாரம்பரிய நெல்லில் பெரியோர் மடியில் அ தொடங்கி மற்றவை கற்றல்
• குக்கூ சிவராஜ் அண்ணனின் பாரம்பரிய விளையாட்டுகள், 
• கரிசல் குழுவினரின் பறையாட்டம், கோலட்டாம், சிலம்பாட்டம் மற்றும் பல...
• வானகம் செந்திலின் கபடி, பம்பரம், கிட்டி, உரி அடித்தல், விடுகதை விளையாட்டுக்கள் தொடங்கி பல பாரம்பரிய விளையாட்டுகள் ...
• தேன்கனி த.ஞானசேகர் ஐயாவின் சிறுதானிய பொங்கல், பாரம்பரிய அரிசி காய்கறி பிரியாணி, கூட்டு, தினைப் பாயசம், பழக்கூட்டு மற்றும் பலவற்றுடன் ம்திய உணவுசெய்ய கற்றுக் கொள்ளல். 
• கல்வி குறித்த நாடகம், சோ. தர்மன் ஐயாவின் கதைகள் அறிமுகம்
• தேன்கனி வாழ்வியல் கல்வி குறித்து எதிர்காலத் திட்டமிடல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் உரையாடல்

இடம் : 

தேன்கனியின் அய்யனார் இயற்கை விவசாயப் பண்ணை, மெப்கோ கல்லூரி அருகில், காரிச்சேரி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.நாள் : அக்டோபர் 11, 2016 செவ்வாய்கிழமை 
காலை 5 மணி முதல் மாலை 6மணி வரை

பயிற்சி நன்கொடை : 

பெரியவர்களுக்கு : ரூ. 400/- தனி நபர் ( உணவு சேர்த்து )
குழந்தைகள் 12 வயதுக்குள் இருப்பவர்களுக்கு : ரூ.150/-

முன்பதிவு அவசியம்.

முன்பதிவிற்கு : 9443575431, 98431 27804, 9790279975, 99442 07220
மாற்றத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்....


www.thenkanivalviyalmaiyam.blogspot.in


புகைப்படங்கள் : தேன்கனி வாழ்வியல் பள்ளி கலந்தாய்வுக்கூட்டங்களில் பெற்றோர்களும், குழந்தைகளும் மகிழ்ச்சியாக விளையாடும் போது எடுக்கப் பட்டது.

Monday, October 3, 2016

 பண்டிகைகளும், சிறப்புகளும் :


பண்டிகை என்ற சொல்லைக் கேட்ட உடனே நினைவுக்கு வருவது கொண்டாட்டம் தான். நம் முன்னோர்கள் பண்டிகைகளின் போது நம் மண்ணின் வாழ்க்கை முறையையே வெளிப்படுமாறு சீறும் சிறப்புமாக கொண்டாடி வந்தார்கள். அதன் அடையாளமாய் பண்டிகை கால தோரணங்கள் வாழை தொட்டு மா, ஆவாரை, வேப்பை, துளசி, பீளைப்பூ, இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமானால் மானாவாரி பகுதியாக இருக்குமானால் அந்த பருவத்தில் விளைந்த பனை பூ , கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கன்னி போன்ற தானியங்களின் கதிரையே வழிபாட்டிற்குப் பயன்படுத்தி வந்தனர்.
நஞ்சை நிலப்பகுதியெனில் மஞ்சள், நெற்கதிர்கள், தென்னம்பூ, பழ மரங்களின் இலைகள் மற்றும் வாசனை பூக்களைப் பயன்படுத்தி வந்தனர்.
அவ்வாறே , பண்டிகை காலங்களில் தங்களின் உணவு - கலாச்சாரத்தையும் மண்ணின் வாழ்வியலையும் இணைத்தே வாழ்ந்து மகிழ்ந்தனர்.
இதன் காரணமாக விழாக்கள் என்பது பலரின் வாழ்விலும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது. காரணம் இவ்விழாக்களில் பயன்படுத்தப்படும் விதைகள், அலங்காரப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள், மண் மற்றும் கல் பாத்திர வகைகள் என அனைத்தும் நம் தாத்தன் பூட்டன் கால வாழ்க்கை முறையை நினைவில் வகைவகையாய் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதனால் உள்ளூரில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டு , விவசாயிகளின் பொருட்களுக்கு மற்றைய நாட்களை விட பண்டிகை நேரங்களில் கூடுதல் ஊக்கம் கிடைக்கப் பெற்றது. மேலும் உள்ளூரின் சிறு தொழில்களான எண்ணெய் ஆட்டும் செக்கு இயந்திரம் தொடங்கி, அரவை மில்கள் ( ரைஸ்மில்), தையல் கூடங்கள், துணிக்கடைகள் , மிட்டாய் கடைகள், மளிகைக் கடைகள் ... என கூட்டம் அலை மோதும்.
இதனால் நம் அண்ணன், தம்பி, மாமான், சித்தப்பன் என இரத்த உறவுகள் தொடங்கி நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரார்கள் என அனைவரும் ஏதாவது ஒரு வழியாலாவது பயன் அடைவார்கள். பெரும்பாலும் பயன்கள் ” பண்ட மாற்றாகவே “ இருக்கும்.
ஆனால், இன்று மனித வாழ்வு நவீனம், நாகரீகம், கெளவரம், உயர்வு, தாழ்வு என்கிற வணிக வலையில் சிக்கி உள்ளது. இதனால் நம்முடைய மண்ணின் வாழ்வியலை நாமே இழிவாக்கி , வெளிநாட்டு வணிக கலாச்சாரத்தால் ஆரோக்கியம் இழந்து, நம்முடைய சம்பாத்தியம் மற்றும் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த கூட்டு வாழ்க்கை முறையை இழந்துள்ளோம். இதனால் பெரு நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்குமே கொள்ளை லாபம். நாம் வெறும் நுகர்வோராக மட்டுமே மாற்றப் பட்டுள்ளோம்.
அதற்கு சாட்சியாக நாம் இழந்த பாரம்பரிய பொருட்கள் மற்றும் நம்மை நம்பி வாழ்ந்த சக தொழில் முனைவோர்கள் என பலவற்றைப் பார்ப்போம்.
• மண் & கல் பாண்டங்களையும் ,செப்புப் பாண்டங்களையும் இழந்தோம். மாறாக பிளாஸ்டிக், நான்ஸ்டிக், என ஆனோம். இதனால் சுற்றுசூழல் கெட்டு கம்பெனிகள் மட்டுமே லாபத்தில் கொழுத்தன. மண் குயவர்கள் வாழ்விழந்தனர்.
• உள்ளூரில் விளைந்த பருத்தி ஆடைகளும், இயற்கை சாயங்களும் அழிக்கப்பட்டு குடிநீரை ஆதாரங்களை அழித்தோம். பெரும் கம்பெனிகளின் ஜட்டி தொடங்கி அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் கழிவுகளால் வீடு நிரம்பியுள்ளது. விளைவு உள்ளூர் விவசாயி தொடங்கி நம்முடைய சகோதர சகோதரிகளின் டெயலரிங் வரை வாழ்வு தொலைந்துள்ளது.
• நம் மண்ணின் கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கன்னி, பாரம்பரிய அரிசி , பருப்புகளின் பயன்பாடுகள் குறைந்து சர்க்கரை நோய் தொடங்கி கேன்சரை வரவழைக்கும் மைதா வரை கெட்டுப் போகாத அளவிற்கு இரசாயண நஞ்சுகளால் பேக்கிங் செய்யப்பட்ட சாக்குலேட், பிஸ்கட், விலங்குகளின் கொழுப்புகள், ஐஸ்கிரிம்கள் மற்றும் பேக்கிரி உணவுகளால் பல்வேறு நோய்களுக்கு சொந்தக் காரர்கள் ஆகினோம்.
• உள்ளூரின் விவசாயி & செக்கு இயந்திரத்தினால் கிடைத்த நல்ல கொழுப்புகள் நிறைந்த ஆரோக்கிய எண்ணெய்களை தொலைத்து விட்டோம். மாறாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய கழிவுகள், விலங்குகளின் கொழுப்புகள், மரபணு மாற்றம் செய்யப் பட்ட பயிர்கள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய் என்கிற பெயரில் ஒரு மெல்லக் கொல்லும்(slow Poison), பாமாயில் போன்ற விஷம் கிடைக்கப் பெற்றோம்.
• அதற்கும் மேலாக இந்த மகளுக்கு காரம் பிடிக்கும் , அந்த மகனுக்கு அதிரசம், பேரனுக்கு முறுக்கு, பேத்திக்கு லட்டு என அன்போடும், ஆரோக்கியத்தோடும் செய்து கொடுத்து, நம்மை நேசித்த பாட்டிமார்களை இழந்தோம். மாறாக டிவியில் காட்டப்படும் கவர்ச்சிப் உணவுகளுக்கு மயங்கி யாருடைய நலனிலும் அக்கறை கொள்ளாது, தன்னுடைய லாப நலனை மட்டுமே பெருக்க நினைக்கும் கம்பெனி உணவுகளுக்கு அடிமையானோம்.
• பாட்டியின் ஞானத்தில் கிடைத்த செக்கு எண்ணெயின் குளியல்கள் மறந்து , மூலிகை சீகைக்காய், குளியல் பொடிகளைத் தொலைத்தோம். மாறாக சோப்பு, ஷாம்பு என மயிறோடு சேர்த்து முன்னோரின் அறிவையும் ஆரோக்கியத்தையும் இழந்தோம்.
மாற்று என்ன ?
இப்படியே இழந்தவற்றையெல்லாம் அடிக்க்கிகொண்டே போவதை விட இதற்கெல்லாம் என்ன மாற்று…. இழந்தவற்றைப் பெறுவது எப்படி ? என்று சிந்திப்பதே சிறந்தது. நம்முடைய முன்னோர் தொடங்கி இயற்கை வாழ்வியல் வழிகாட்டி கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் வரை அனைவரும் கற்றுக் கொடுத்த சுய சார்பு வாழ்வியலைப் பின்பற்றினாலே போதும்….
அதற்கு அனைவரும் தன்னை சுற்றி நடக்கும் இயற்கை வாழ்வியல் மாற்றங்களையும், அதற்காகத் தன்னை அற்பணிவரையும் அடையாளம் கண்டு அவர்களின் சிறு சிறு முயற்சிக்கு ஊக்கம் அளித்தாலே போதும்.
மாற்றும் என்பது சொல் அல்ல.. செயல்…
ஆகையால் தான் தேன்கனி உழவர் கூட்டமைப்பானாது பிரச்சாரத்தோடும் சொல்லோடும் என்றும் நிற்பதில்லை. ஆங்காங்கு சிறிய அளவிளேனும் செயல் படுபவர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும். அதன் வெளிப்பாடு தான் தேன்கனி தனது மூன்றாவது ஆண்டில் வெற்றி அடியெடுத்து வைப்பதோடு, இயற்கை வழி உழவர்களையும், மக்களையும் கூட்டமைப்பாக மாற்றி வாழ்வியல் அறிவையும், ஆதாரங்களையும் கைமாற்றிக் கொடுக்கிறோம்.
அதன் ஒரு பகுதியாக இனி வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நம் முன்னோர்களின் ”சுயசார்பு வாழ்வியல் முறையை” பின்பற்ற உள்ளோம். அதில் ஏற்கனவே கூறியவாறு பாரம்பரிய விதைகள், அலங்காரங்கள், உணவில் சீர்(சிறு) தானியங்கள், பருப்புகள், பாரம்பரிய அரிசிகள், செக்கு எண்ணெய்கள் , பாரம்பரிய தின்பண்டங்கள் , ஆடைகள் , மண் பொருட்கள், தொழில் முறைகள், கலைகள், விளையாட்டுப் பொருட்கள் என நம்மால் எட்ட முடியும் இலக்குகள் வரை அனைத்தையும் அடைவது என உறுதி பூண்டுள்ளோம்.
அதை இயற்கை வாழ்வியலின் தந்தை தேசப் பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று தேன்கனியின் 130 வார உழவர் சந்தையில் காட்சிப் படுத்த உள்ளோம்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் நேரிலும், மற்றவர்கள் கொரியர் அல்லது லாரி போக்குவரத்தின் மூலம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம்.
உங்கள் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் உறுதி செய்ய நாங்கள் தயாரக உள்ளோம். எங்களை ஊக்கப்படுத்தவும், எங்களோடு கரம் கோர்க்கவும் நீங்கள் தயாரா ?
குறிப்பு :
***********
இரசாயண கலப்பில்லா பாரம்பரிய உணவுகளின் தன்மை, சுவை, குணம், இருப்பு வைப்பதற்கான பக்குவம் மற்றும் கால அளவுகளை உணர்ந்திருத்தல் நலம். அல்லது ஏற்றுக் கொள்ளப் பழகுதல் நலம்.
மீட்கப்பட்ட பாரம்பரிய வாழ்வியலின்
அடையாளங்களில் சில :
( டால்டா, ரைஸ்பிராண்ட் ஆயில், பாமாயில், இரசாயண நிறமூட்டிகள், மைதா, சீனி, அஜீணோமோட்டா இல்லாமல் நமது மரபு தானியங்கள் கொண்டு இயற்கை இனிப்புகளான பனங்கருப்பட்டி, கரும்பு சர்க்கரை, செக்கு கடலை எண்ணெய் கொண்டு தயாரிக்கப் பட்டது.
இவற்றை உங்களின் அன்பிற்கினியவர்களுக்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் நிறுவனங்களில் தங்களுடன் பணி புரிபவர்களுக்கென அன்பளிப்பு அளிக்கலாம்.
மேலும் இயற்கை அங்காடிகளுக்கு & கூட்டு குடும்பங்களுக்கும் மொத்தமாக தேவையெனில் சிறிய அளவில் சலுகை விலையில் கிடைக்கும். முன்பதிவு அவசியம். பணம் முன்கூட்டியே கொடுக்க வேண்டுகிறோம்.)


1. மரபு இனிப்பு வகைகள் :
*****************************************
• திணை அதிரசம்
• வரகு ஜிலேபி
• எள்ளு உருண்டை
• திரிகடுகம் கடலை மிட்டாய்
• நிலக்கடலை உருண்டை
• மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய்
• பாதம் பேரீச்சை லட்டு
• கருப்பட்டி நவதானிய அல்வா
• திரிகடுகம் பொரிகடலை மிட்டாய்
• திணை இனிப்பு சீடை (கேக்)
இவை அனைத்தும் கலந்த கலவை கொண்ட பெட்டி
2. மரபு பலகார வகைகள் :
*****************************************
• சாமை அரிசி மிக்சர்
• குதிரைவாலி சீவல்
• கேழ்வரகு ரிப்பன் முறுக்கு
• வரகு காரச்சேவு
• சாமை முறுக்கு சேவு
• கேழ்வரகு முடக்கற்றான் பக்கோடா
• மாப்பிள்ளை சம்பா காரப் அவல் பொரி
• காரப் பாசிப் பயறு & வறுத்த கடலை பருப்பு
• கேழ்வரகு காரப் பூந்தி
இவை அனைத்தும் கலந்த பெட்டி
3. மரபு பலகாரங்களுக்கான மூலப் பொருட்கள் :
************************************************************************
மேல குறிப்பிட்டுள்ள பலகாரங்கள் போல் இன்னும் ஏராளமான பலகாரங்களை நீங்களே குடும்பத்தோடு தயார் செய்யத் தேவையான மூலப் பொருட்களை மொத்தமாக மற்றும் சில்லறை விலைக்கும் தருகிறோம்.
• செக்கு கடலை , நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், தீட்டாத(பாலிஸ் செய்யாத) சீர் தானியங்களான வரகு, சாமை, குதிரைவாலி, தினை, பனிவரகு பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி
• சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுணி, மூங்கிலரிசி, காட்டுயானம், கைவர சம்பா, பாஸ்மதி, கருங்குறுவை, பூங்கார் போன்ற பல பாரம்பரிய அரிசி மற்றும் அவல் வகைகள்
• சுண்டல் செய்யத் நாட்டு உளுந்து, நாட்டுப் பாசி, கொண்டக்கடலை, கொள்ளு , முளை கட்டிய செம்மண் துவரம்பருப்பு , பாசிப்பருப்பு, இட்லி உளுந்தபருப்பு, கடலை பருப்பு மற்றும் நிலக்கடலை வகைகள்
• பனங்கருப்பட்டி, கரும்பு சர்க்கரை, பனைகற்கண்டு வகைகள்
4. குளியலுக்குத் தேவையானவைகள் :
***********************************************************
• செக்கு நல்லெண்ணெய், மூலிகை சீகைக்காய், 22 பொருட்கள் அடங்கிய குளியல் பொடி, பூசு மஞ்சள் மற்றும் பல கிடைக்கும்
5. உடனடித் தாயரிப்புகள்
*****************************************:
• மாப்பிள்ளை சம்பா அவல் & சிறு தானிய அவல், சேமியா வகைகள்
• ஆவாரம்பூ சுக்கு மல்லி மூலிகை குடிநீர் பொடி
• நவதானிய சத்துமாவு வகைகள், சீர் தானிய முளைகட்டிய தோசை வகைகள், பலதானிய அடை கலவை, முளைகட்டிய உளுந்த களி மற்றும் சீர்தானிய வரகு, சாமை, குதிரைவாலி களி வகைகள்
இன்னும் ஏராளமான இயற்கை வழி மற்றும் இராசயண கலப்பில்லா பொருட்கள் நமது “ தேன்கனி உழவர் சந்தை மற்றும் தேன்கனி பாரம்பரிய அறுசுவையகத்தில் கிடைக்கும்.
தொடர்புக்கு : 978764 8002, 94435 75431,
98431 27804, 99442 07220
நீங்கள் விரும்பினால் உங்கள் பகுதியிலும் இது முயற்சிகளை முன்னெடுக்க எங்களுடைய அனுபவங்களை கைமாற்றிக் கொள்ளவும், பயிற்சி அளிக்க தயாராகவும் உள்ளோம். 2 மாதத்திற்கு ஒரு முறை 3 நாள் மதிப்புக்கூட்டு களப்பயிற்சி அளித்து வருகிறோம்.
உங்கள் ஊரைச் சுற்றியுள்ள பாரம்பரிய உணவு, கலை, விளையாட்டு, அலங்காரம் மற்றும் நம்முடைய பாரம்பரியத்தை மீட்கும் பணியில் உள்ளவர்களை வரும் பண்டிகைகளை முன்னிட்டாவது அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களோடு கரம் கோர்க்கவும் தயாங்காதீர்கள்.
இது நம்முடைய சந்த்திக்காக தற்சார்பு வாழ்வியலை அடையாளங்காணும் சிறு முயற்சி...