Friday, September 30, 2016


தேன்கனி வாழ்வியல் பள்ளி தொடக்கவிழா &

கலந்தாய்வுக் கூட்டம்

வாழ்தல் & பிழைத்தல் :
வாழ்தல் என்பது நுகர்வுக்கு அடிமையில்லாமல் சுயசார்பாகவும், மகிழ்வுடனும், பலருக்கும் பயன்படும்படியும் இயற்கையோடு இனிமையாக சலிப்பு இல்லாமல் இருத்தலாகும். ஆனால் பிழைத்தல் என்பது விபத்து நடந்து வலியுடனும், வேதனையுடனும், துன்பத்துடனும் , வெறுப்புடன் இருப்பது.

நம்முடைய & குழந்தைகளுடைய வாழ்க்கை என்பது இன்று வாழ்தலாக உள்ளதா ? அல்லது பிழைப்பாக உள்ளதா ? என்று எண்ணிப்பாருங்கள்.
தேன்கனி வாழ்வியல் பள்ளி :
===============================
இதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் ” மாற்று கல்வி வளர்ச்சி ” கண்டு வருகிறது. இந்த சுவரில்லா கல்விமுறையை பகுதிவாரியாக செயல்படுத்தும் விதமாகவும், அதற்கான முன் தயாரிப்புப் பணிகளை செயல்படுத்தும் வேலைகளையும் “ வானகம் நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவத்தின் கல்விக்குழு ” செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 11,2016 விஜயதசமியன்று சிவகாசியில் ”தேன்கனி வாழ்வியல் பள்ளி “ துவங்க உள்ளோம்.
உங்கள் பிள்ளைகள் எந்தக் கல்விமுறையில் பயின்றாலும், ” தேன்கனி வாழ்வியல் பள்ளியில் “ பகுதிநேரமாக இணைந்துகொள்ளலாம். வார இறுதிநாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் வாழ்வியல் பள்ளி இயங்கும். இங்கே போட்டி இல்லை, தேர்வுகள் இல்லை. சக உயிர்களோடு இணைந்து வாழும் பண்புகளையும், அஞ்சாமல் சுயமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதே வாழ்வியல் பள்ளியின் நோக்கங்கள். இவற்றிற்கேற்றவாறு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைகளில் மட்டுமே பாடங்கள் நடத்தப்படமாட்டாது.
நம்முடைய உணவை தாமே இயற்கை முறையில் நஞ்சில்லாமல் உற்பத்தி செய்ய இயற்கை விவசாயம் , மாடித்தோட்டம், மரக்கன்று நடுதல் , மூலிகைகள் வளர்த்தல் போன்ற களப் பயிற்சிகள் இயற்கை விவசாயப் பண்ணைகளிளே நட்த்தப்படும்.
மிக முக்கியமாக, குழந்தைகளுக்கு உடல் நலப் பயிற்சிகள் (யோகா, தியானம் உட்பட ) அளிக்க இருக்கிறோம். பசி, தாகம், மலம் கழித்தல், சிறுநீர்ப் போக்கு, சளி, காய்ச்சல் ஆகியவைகளை தெளிவுபடுத்தும் பாரம்பரிய மருத்துவ அறிவு ஆகியவை எல்லாம் பாடத் தலைப்புகள். தமக்கான உடல்நலத் தேவைகளைத் தாமே கையாளும் வகையில் ”பாரம்பரிய மருத்துவ முறை “ கற்றுத் தரும் முறை இது.
சிலம்பம், ஒயிலாட்டம், கோலாட்டாம், பொம்மலாட்டம், சுயமாக பாடும் திறன், எழுதும் திறன், கற்கும் திறனை அதிகரிக்கும் பாரம்பரிய கலைகள், உடலை வலுப்படுத்தி கூட்டு வாழ்க்கையை வாழ கபடி, நினைவாற்றலை அதிகரிக்கும் விடுகதை விளையாட்டுகள், மேடை பேச்சு, நடிக்கும் நாடக கலைகள் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள்…
வயதுக்கேற்றவாறு தொழிற் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன. வீட்டிற்குத் தேவையான பொருட்களைச் செய்துகொள்ளும் முறைகள் பயிற்சியளிக்கப்படும். பற்பொடி, சோப்பு போன்ற சிறுபொருட்களை எல்லாம் உங்கள் பிள்ளைகளே உங்கள் குடும்பத்திற்குத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதற்கான செய்முறைகள் அனைத்தும் கற்றுத் தரப்படும்.
மாத ஒருமுறை பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கல்வி அளிக்கப்படும்.
ஆரோக்கியமான , சுயசார்பான , கூட்டு வாழ்க்கையை வாழும் கல்வி முறையை நெறிப்படுத்தும் மேலும் நெறிப்படுத்தும். எங்களது இந்த சிறுமுயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவோரை அன்புடன் அழைக்கிறோம்.
தேன்கனி வாழ்வியல் பள்ளி தொடக்க நாள் : 11-10-16 செவ்வாய்க்கிழமை
கலந்தாய்வு நாள் : 2-10-16 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 4.00மணி முதல் மாலை 7.00மணி வரை
இடம் : தேன்கனி வாழ்வியல் மையம்,
1834/7/8, 2வது தளம், P.K.N ரோடு, சங்கீதா லாட்ஜ் அருகில், பழனியாண்டவர் தியோட்டர் பின்புறம், சிவகாசி.
தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு : 9443575431, 98431 27804, 9790279975, 99442 07220
மாற்றத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்....