Monday, January 2, 2017

தேன்கனி களையெடுக்கும் & ஊடு உழவு பண்ணைக் கருவிகள் கண்காட்சி :

நம்மாழ்வார் ஐயாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் ” தேன்கனி களையெடுக்கும் & ஊடு உழவு பண்ணைக் கருவி அறிமுகம் செய்யப் படுகிறது.


நம்மாழ்வார் ஐயா தன்னுடைய வாழும் கிராமம் திட்டத்தில் நமக்குத் தேவையான பண்ணைக் கருவிகளை நாமே செய்து சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
இந்த கருத்தை அடிக்கடி நானும் வலியுறுத்தி வந்த நிலையில் தேன்கனியின் முன்னோடி இயற்கை விவசாயி அ.நாராயணன் அவர்கள் தனக்கு இருந்த பட்டறை வேலையின் முன் அனுபவத்தில் எளிய இந்த கருவியை வடிவமைத்துள்ளார்.
இந்த கருவியை பயன்படுத்தி என்னுடைய கால்கானியில் ஊடு உழவு செய்து, பாசிப் பயறு மற்றும் தட்டைப்பயுற்றை கடந்த 17-12-16 அன்று விதைத்தேன்.
இன்று 31-12-16 அன்று முதல் ஊடு உழவின் மூலம் முதல் களை யெடுக்கப் பட்டது.
இந்த கருவியை நாளை 1-1-17 வானகத்தில் காட்சிப்படுத்த இளம் விவசாயி நாராயணன் அவர்களை ஊக்கப் படுத்த உதவிய வானகம் குமார் ஐயா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...




No comments:

Post a Comment