Saturday, October 8, 2016

தேன்கனி வாழ்வியல் பள்ளி



ஊர் திரும்புதல் ( கிராமங்களை நோக்கி திரும்புதல் ) :

தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பு, வானகம் கல்விக்குழு, குக்கூ குழந்தைகள் வெளி, கரிசல் கலைக்குழு மற்றும் மரபுவிதை நாடோடிகள் அமைப்புகள் இணைந்து நடத்தும் ஊர் திரும்புதல் பயிற்சி ( முதல் முயற்சியாக 1 நாள் வாழ்க்கையை கிராம சூழலில் வாழ்தல்)

பாரம்பரிய வாழ்வியல் & கலைத் திருவிழா & தேன்கனி வாழ்வியல் பள்ளி துவக்க விழா : 

Teaching ( கற்றுக் கொடுத்தல்) :
Teaching என்பது தன்னிடம் உள்ளதை கற்று கொடுக்க (திணிக்க) முயலுதல்.
Learning (கற்றல்) :
Learning எனபது தன்னக்குள் எழும் கேள்வி மூலமாக தானாகவோ அல்லது மற்றவரின் துணை கொண்டு கற்றலாகும்.
கல்வி :
கல்வி என்பது எப்போதும் கற்றலாகவே (Learning) இருக்க வேண்டும். அதைத் தான்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
என்று வள்ளுவர் கூறுகிறார். அப்போது தான் அறிவு என்பது ஊற்று போல உள்ளிருந்து ஊறும்.
இதைத் தான் நம்மாழ்வார் ஐயாவும் கல்வி என்பது கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துதல். அந்த சூழல் எனப்து கற்பதற்குத் தேவையான மாதிரிகள் அடங்கியது. பின்னர் கற்ற விரும்புவர் அந்த சூழலில் தனக்குள் எழும் கேள்விகள் மூலம் விடைகளை கண்டு பிடிப்பார் . கற்றலுக்கான சூழலாகத் தான வானகத்தை நம்மாழ்வார் ஐயா உருவாக்கியுள்ளார்.

தேன்கனி வாழ்வியல் பள்ளி :

ஆகவே தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பானது தன்னுடைய 5கால தொடர் பயணத்தில் இயற்கை விவசாயிகள், பண்ணைகள், மரபு வைத்தியர்கள், கல்வியாளர்கள், மரபு கலைஞர்கள், கலைகள் , உணவியல் நிபுணர்கள் தொடங்கி வாழ்க்கைக்குத் தேவையானவர்களையும் , வாழ்வதற்கான சூழலையும் உருவாக்கியுள்ளது.

அத்தகைய உயிர்ப்பான சூழலில் குழந்தைகளும், பெற்றோர்களும் வாழ விரும்பும் போது அந்த அறிவையும், அனுபவத்தையும் கைமாற்றிக் கொடுக்க முடியும். இதன் அடிப்படையில் தேன்கனி வாழ்வியல் பள்ளிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை 4முறை நடத்தி உள்ளோம்.


அதன் முடிவில் தேன்கனி வாழ்வியல் பள்ளியை வருகிற அக்டோபர் 11ம் தேதி விஜயதசமி விடுமுறை நாளான செவ்வாய்க் கிழமை அதிகாலை நம்முன்னோர்களின் வாழ்வியலான கிராமத்து சூழலில் தொடங்க உள்ளோம். அன்றைய தினம் பெற்றோர்கள், குழந்தைகள் என இருவருக்கும் முதலில் தேன்கனி பள்ளி வாழ்வியல் குறித்து அனுபவப் பூர்வமாக உணர்த்த உள்ளனர்.


நிகழ்ச்சி நிரல் :

• அதிகாலை 5 மணிக்கு எழுதல்

• காலைகடன் கழித்து, ஆலும் வேலுமுடன் பல் துலக்கல்
• குளிர்ந்த கிணற்று நீரில் மண் & மூலிகை குளி(ர்)த்தல்
• சாணம் கரைத்து முற்றம் தெளித்து அரிசி மாவுக் கோலம்
• கால் நடைகளுக்கு உணவளித்து, தோட்டத்தில் கள வேலை செய்தல்
• சூரிய வணக்கத்துடன் யோகாப் பயிற்சி
• நாட்டுக் கம்பங்கூழும், அவல் சர்க்கரைப் பொங்கலும், முளைகட்டிய தானியமும், மூலிகை தேநீருடன் காலை உணவு
• கும்மியாட்டத்துடன் மரக்கன்று நட்டு குழந்தைகள் கையால் தேன்கனி வாழ்வியல் பள்ளி துவக்குதல்
• பாரம்பரிய நெல்லில் பெரியோர் மடியில் அ தொடங்கி மற்றவை கற்றல்
• குக்கூ சிவராஜ் அண்ணனின் பாரம்பரிய விளையாட்டுகள், 
• கரிசல் குழுவினரின் பறையாட்டம், கோலட்டாம், சிலம்பாட்டம் மற்றும் பல...
• வானகம் செந்திலின் கபடி, பம்பரம், கிட்டி, உரி அடித்தல், விடுகதை விளையாட்டுக்கள் தொடங்கி பல பாரம்பரிய விளையாட்டுகள் ...
• தேன்கனி த.ஞானசேகர் ஐயாவின் சிறுதானிய பொங்கல், பாரம்பரிய அரிசி காய்கறி பிரியாணி, கூட்டு, தினைப் பாயசம், பழக்கூட்டு மற்றும் பலவற்றுடன் ம்திய உணவுசெய்ய கற்றுக் கொள்ளல். 
• கல்வி குறித்த நாடகம், சோ. தர்மன் ஐயாவின் கதைகள் அறிமுகம்
• தேன்கனி வாழ்வியல் கல்வி குறித்து எதிர்காலத் திட்டமிடல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் உரையாடல்

இடம் : 

தேன்கனியின் அய்யனார் இயற்கை விவசாயப் பண்ணை, மெப்கோ கல்லூரி அருகில், காரிச்சேரி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.நாள் : அக்டோபர் 11, 2016 செவ்வாய்கிழமை 
காலை 5 மணி முதல் மாலை 6மணி வரை

பயிற்சி நன்கொடை : 

பெரியவர்களுக்கு : ரூ. 400/- தனி நபர் ( உணவு சேர்த்து )
குழந்தைகள் 12 வயதுக்குள் இருப்பவர்களுக்கு : ரூ.150/-

முன்பதிவு அவசியம்.

முன்பதிவிற்கு : 9443575431, 98431 27804, 9790279975, 99442 07220
மாற்றத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்....


www.thenkanivalviyalmaiyam.blogspot.in


புகைப்படங்கள் : தேன்கனி வாழ்வியல் பள்ளி கலந்தாய்வுக்கூட்டங்களில் பெற்றோர்களும், குழந்தைகளும் மகிழ்ச்சியாக விளையாடும் போது எடுக்கப் பட்டது.

No comments:

Post a Comment