Tuesday, May 6, 2025

 #நம்மாழ்வார் ஐயா விரும்பிய சமூக மாற்றம் மென்மேலும் பெருகும்....


#பயிற்சி அனுபவப் பகிர்வு :

#ஜெ.கருப்பசாமி.

#நோய்யில்லாமல்
ஆரோக்கியமாக வாழ்ந்த நம் சமூகம் பெரும் வியாபாரிகளின் சூழ்ச்சியால் ஏதுமறியா குழந்தைகளும், பெண்களும் என எல்லோரும் இரத்த சோகை தொடங்கி, கருப்பை சிக்கல்கள், குழந்தைப்பேறு சிக்கல்கள் உட்ப பல பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.



இதிலிருந்து மீள
#உண்பதை விளைவிப்போம் அல்லது #விளைந்ததை உண்போம் என்கிற #நம்மாழ்வார் ஐயாவின் தத்துவத்தின் அடிப்படையாக வைத்து மண்ணின் மரபு வழிப்பட்ட உணவுக்கான பாடத்திட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்கும் மிகச்சீறிய முயற்சியை கடந்த 14 ஆண்டுகளாக #தேன்கனி குழுவினர் செய்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் விளைவிப்பவைகளையும், விளைந்ததையும் எப்படியெல்லாம் உணவாகவும், வாழ்வியலாகவும், அறம் சார்ந்த சந்தைப்படுத்துதலோடு பகிர்தலையும் கைமாற்றிக் கொடுக்க 3நாள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


இப்பயிற்சி கடந்த #ஏப்ரல் 25 வெள்ளி தொடங்கி 27ஞாயிறுவரை சிவகாசியில் நடைபெற்றது.

#இப்பயிற்சியில்
களத்தில் பல ஆண்டுகளாக திறம்பட களப்பணியாற்றி வரும்
#இயற்கை உழவர்கள், அக்கு ஹீலர்கள் 6நபர்கள், குடும்ப பெண்கள், சமூகப் பணி செய்து வருபவர்கள் என 9நபர்களும், தேன்கனி அமைப்பின் தன்னார்வலர்களும் கலந்து கொண்ட எளிமையான & மிகவும் தனித்திறன் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாக அமைந்தது.

இந்த #நவீன வியாபார உலகில் தான் கற்றவற்றை ரகசியமாக வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மத்தியில் வழக்கம்போல் #தேன்கனி குழுவினர் தாங்கள் சமூகத்திடம் கற்றவற்றை சமூகத்திற்கே வெளிப்படையாக பகிர்ந்தார்கள்.


இப்பயிற்சியிலும் இயற்கை #வாழ்வியலாளர், யோக கலை நிபுணர், இயற்கை உணவு ஆய்வாளர் தேன்கனி த. ஞானசேகரன் ஐயா அவர்கள் கைவண்ணத்தில் அடுப்பில்லா சமையல் , மூலிகை ரசம், சாறு, பானங்கள், கருந்(சிறு)தானிய சமையல், மரபு அரிசி சமையல் முதல் நவீன உணவுகளையும் மரபு ரகங்கள் வெல்லும் வல்லமையில் களப் பயிற்சியும், சுவையான உனவுகளும் அனைவருக்கும் பகிரப்பட்டது.

மேலும் #தேன்கனி மரபு அறுசுவையத்தின் க.முத்துக்குமார் தன்னுடயை 14 ஆண்டுகால வெற்றிகரமான மரபு இனிப்பு & கார திண்பண்டங்கள், மதிப்பு கூட்டல் உணவுகள், மசாலா பொடி, குளியல் பொடி மற்றும் பல தயாரிப்புகளின் செய்முறை மற்றும் பல நுட்பங்களையும் எளிமையாக கைமாற்றிக் கொடுத்தார்.


மேலும் #இயற்கை வழி உழவரும், பண்ணைக் கருவிகள் வடிவமைபாளரும், மூலிகை மதிப்புகூட்டலில் கைதேர்ந்தவரும் தேன்கனி அ.நாராயணன் அவர்கள் காட்டில் தானாக விளைந்து கிடக்கும் மூலிகைகளில் தேநீர் தயாரிப்பது தொடங்கி இயற்கை வேளாண்மையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மதிப்புகூட்டல் பொருட்கள் தயாரிப்பது, அதை எப்படியெல்லாம் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்துவது குறித்தும் எளிமையாக தன் அனுபவங்களை கைமாற்றிக் கொடுத்தார்.


கூடுதலாக #விளக்கெண்ணெய் தயாரிக்கும் அனுபவங்களையும், அதன் மகத்துவத்தையும் பகிர்ந்தார்.

#இயற்கை வேளாண்மை, #விதை, உணவியலின் பன்முகத் தன்மை, இயற்கை வாழ்வியல், மருத்துவம், தற்சார்பு சந்தைமுறை, உணவு அரசியல், கலப்பட உணவுகள், நவீன உணவுகளுக்கு மாற்றான மரபு உணவுகளின் செய்முறை என போன்ற பல தகவல்களை ஜெ.கருப்பசாமி, க.அருண் சங்கர், செல்வம் போன்றோரும் பகிர்ந்தனர்.

12 வருட வெற்றிகரமான #தேன்கனி சந்தைக்கு களஅனுபவம் பெற எல்லோரும் சென்று உழவர்களோடும், மதிப்புகூட்டல் பொருட்கள் செய்பவர்களோடும், நுகர்வோர்களோடும் கலந்துரையாடினர். மேலும் சந்தையில் ஜெ.சங்கர், அ.நாராயணன், கனகசபாபதி, க.முத்துக்குமார், ஜெ.கார்மேகம், அ.அருண்சங்கர், க.தனசேகர் மற்றும் பலரும் தங்களின் சந்தை அனுபவங்களைப் பகிர்ந்தனர்.





மருந்தில்லா மருத்துவமும், #அக்கு பங்சர் மருத்துவமும் செய்துவரும் திரு. செந்தில் அவர்கள் நோய்யில்லாமல் வாழத் தேவையான இயற்கை வாழ்வியல் நுட்பங்களைப் பகிர்ந்தார்.

இப்பயிற்சி நாளும் சமையலறையில் வாழும் பெண்களை 3நாட்கள் அடுப்படிக்கு விடுதலையளித்து, நல்ல ஓய்வோடும் , சுவையான உணவோடும், மகிழ்வான விளையாட்டோடும் கல்வி கற்கும் தாய்வீடு போல் அமைந்தது..

உணவின் வழியாகவும், வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவும் மரபு மருத்துவ வழிகாட்டல் மூலமாகவும் தீர்க்க எண்ணெய் குளியல், #புற்றுமண் குளியல், யோக மற்றும் அக்கு பங்சர் மருத்துவம் அனுபவங்களும் பகிரப்பட்டு சில ஆச்சர்யமான அனுபவத்தை பயிற்சியில் பங்குபெற்றவர்கள் அடைந்ததை காண முடிந்தது.

அடுத்த 5 ஆண்டுகளில் #இயற்கை வழி வேளாண்மையும், இயற்கை #உணவு மதிப்புக் கூட்டலும், ஊர்தோறும் உழவர்களின் #சந்தைகளும், ஆடம்பரமில்லா இயற்கை அங்காடிகளும், இயற்கை வாழ்வியல் மையங்களும், இயற்கை வாழ்வியல் முறைகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் இன்றைய நிலையை விட பல பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.


அதற்கு சாட்சியாய் கூட்டம் கூட்டமாக நல்லதொரு வாழ்வியலை தேடுவோர்கள் ஒன்றாக கூடி கற்றும், அதை பிறக்கு கைமாற்றிக் கொடுத்தும், ஒன்றிணைந்து செயல்படுவதுமாக நிகழ்கிறது.

மேலும் தேன்கனி அமைப்போடு பயணிக்கும் ஒவ்வொரு உழவர் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு என்பது ஒவ்வொரு பயிற்சிக்கும் அசாத்தியமானது.

இப்பயிற்சி எங்களுக்கு பொறுப்பையும், நாம் செல்ல வேண்டிய பாதையையும் மென்மேலும் தெளிவுப்படுத்துகிறது.

நம்மாழ்வார் ஐயாவின் செயலான புழுதியிலும் புழுதியாய் வாழ்பவர்களையும், நலிவுற்று வாழ்பவர்களையும், நவீன சமூகத்தால் கோமாளிகளாக்கப்படும் இயற்கை வாழ்வியளார்களையும், ஆதரவுக்காக ஏங்கும் எளியவர்களையும் ஒருபடி உயர்த்துவதே நம் அனைவரின் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்கு தேன்கனி குழுவினர் பெரும் பங்களிப்பை வழங்குவோம்.



இந்நிகழ்வு சிறப்பாக நடக்கவும், சமூகத்திற்கு நற்செயல்கள் நடந்து அனைவரும் நலமாக வாழ “ #கீதா_வாழ்வியல்_மையம் தொடங்கி இயற்கை சேவை செய்துவரும் இராதாகிருஷ்ணன் கீதாம்மா குடும்பத்தினர் அவர்களுக்கும் நன்றிகள் பல.. பல..


இப்பயிற்சி அறிவிப்பை அனைவருக்கும் கொண்டு சேர்த்து உதவிய எங்களோடு நாளும் நட்பாய் பழகுபவர்களுக்கும், முகம் தெரியாத நல்ல நோக்கத்திற்க நாளும் உழைக்கும் சமூக வலைத்தள & ஊடக நண்பர்களுக்கு ம், தன்னார்வலர்களுக்கும், அனைவருக்கும் நன்றிகள் பல பல...

#ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்.
இயற்கை வழியில் #ஒற்றுமையாய் வாழ்வோம்.
நன்றி.. நன்றி..

No comments:

Post a Comment