Thursday, August 12, 2021

 விதைப் பரவலாக்க ஒரு நாள் பயிற்சிக்கான முகவரி:

தேன்கனி இயற்கை உழவர் சந்தை:




(தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு கீதா வாழ்வியல் பண்ணை, )
தாய்யம்மாள் கோவில் மண்டம் ,
மின் அலுவலகம் எதிரில், பாறைப்பட்டி (சாத்தூர் சாலை), சிவகாசி. தொடர்புக்கு 94435 75431, 9655437242
பயிற்சி நாள் : 14-8-2021 சனிக்கிழமை
நேரம் : காலை 9- மாலை 4.30 மணி
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி எண்:
A.Narayanan IndinBank
S.B.A/c.No.769396995
IFSC IDIBOOOVO25
Virudhunagar Branch
மதிய உணவு, தேநீர், புத்தகம், வழங்கப்படும்..
ஒரு நாட்டின் பலமே அந்த நாட்டின் உணவு உற்பத்தியை சார்ந்தது. வளமான நாடு என்பது உணவு தன்னிறைவில் தான் தொடங்குகிறது.
நம் தமிழ்நாட்டில் மரபு விதைகளின் வகைகளின் எண்ணிக்கை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கின்றது. ஆனால் அவற்றை முறையான பாதுக்காப்பின்றியும் மறு உற்பத்தி செய்யாமல் விடுவதாலும் அழிவின் விளிம்பில் உள்ள அந்த விதைகளை பலரும் இப்போது மீட்டு வருகிறோம்.
நமது மரபு விதைகளை மறு உற்பத்தி செய்வதிலும் அவற்றை பரவலாக்குவதிலும் வானகம் மற்றும் பல தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து இந்த பணியை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கிறார்கள். இவர்கள் அனைவரும் களத்தில் விதைகளை பரவல் செய்வதில் முக்கியமான நபர்களாக திகழ்கிறார்கள்.
வானகம் நடத்தும் இந்த ஒரு நாள் பயிற்சியில் மரபு விதைகளைக் காக்கும் பொருட்டு அனைவரும் இணைந்துக் கொள்ளலாம்.
மேலும் புதிதாக விதைகளை பற்றிய அறிவும் விதை நேர்த்தியை பற்றிய புரிதலும் இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கிடைக்கும். ஒரு விதையை எப்படி பல விதைகளாக மாற்றுவது என்ற நுணுக்கம் இப்பயிற்சியில் மையமானது.
தேன்கனி இயற்கை உழவர் சந்தை:
====================================
நாள்:05.08.2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் 1.00 வரை
இடம்: காரனேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
7வது ஆண்டாக சிவகாசியில்...
விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும் விற்பனை.....
( நாளைய சந்தையில்)
கருந்தானியங்களான :
=========================
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
பாரம்பரிய அரிசி ரகங்கள் :
=============================
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
கைகுத்தல் பொன்னி,
தூயமல்லி அரிசி,
வெள்ளைப் பொன்னி அரிசி மற்றும் இன்னும் பல பாரம்பரிய அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
*செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்,
பாரம்பரிய விளக்கு எண்ணெய்...*
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
பாரம்பரிய வீட்டு திண்பண்டங்கள் :
====================================
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு, சோள ரவை...
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம், ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்... அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
வெளியூர் நண்பர்களுக்கும் வீ்ட்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு தேவையெனில் தொடர்பு கொள்ளவும் .
கொரியர் மற்றும் லாரி சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
#தேன்கனி இயற்கை உழவர்சந்தை/தேன்கனி வாழ்வியல்மையம்/
தேன்கனி பாரம்பரியருசியகம்

No comments:

Post a Comment