#தேன்கனி குழு & மரபு அறுசுவையகம் நடத்தும்
குடும்பங்களுக்கானகோடைகால சிறப்பு
#மதிப்புக்கூட்டுதல், #சந்தைப்படுத்துதல் & #இயற்கை வாழ்வியல் மூன்று நாள் பயிற்சி :
இப்பயிற்சி கோடைகாலத்தில் ஆடம்பரமில்லாமல் கிராமத்தில் தற்சார்பு வாழ்வியலையும், நல்ல உணவையும், இயல்பான இயற்கை வாழ்வியல் சூழலையும், நல்ல மனிதர்களின் சமூக வாழ்வையும் நம் குடும்பங்களோடு வாழ்ந்தது அனுபவித்து உணர்வதற்கான புத்துணவுப் பயிற்சியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறு வயது முதலே தமிழர்களின் அறம் சார்ந்த வணிக தொழில் முறைகளோடும், சந்தைமுறைகளோடும் வாழ்ந்த நம் சமூகம் அதை மறந்து இன்று நவீன சூதாட்ட வியாபாரிகளின் வியாபரமுறையில் வாழ்வதை மாற்றி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கமான மரபு தொழில்கள் & வணிக வாய்ப்புகளைத் தொடர்வதற்கான வழிகாட்டல் பயிற்சிமுகாம் ஆக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#நாள் : 25-4-25 #வெள்ளிக்கிழமை
காலை 9.00 மணி முதல்
27-4-25 #ஞாயிறு மாலை 5 மணி வரை
இடம் : #கீதா_வாழ்வியல்_மையம், (#தேன்கனி இயற்கை உழவர்களின் ஆய்வுப்பண்ணை) #சிவகாசி.
#நம்மாழ்வார் ஐயா 2013ல் சிவகாசியில் நடந்த மதிப்புக்கூட்டல் பயிற்சியில் கூறியது
#பசுமைப்_புரட்சியின் கோர விளைவால் பிறந்த #குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை #சத்துணவுப் பற்றாக்குறை, இரத்த சோகையால் என பலசிக்கல்களில் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்ணின் #மரபு தானியங்களையும், #பயறு வகைகளையும், காய்கறிகளையும், பழங்களையும், #மழை நீரையும் உண்டு இயற்கையான சூழலில் வாழ்ந்த நம் சமூகம் இன்று, எது சரியான உணவு, சூழல் ? என்பது குறித்து போதிய #விழிப்புணர்வு இல்லாமல் பெரும் நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் உலகமயமாக்கலின் விளைவால் பொது சந்தைகளில் புட்டிகளில் அடைக்கப்பட்ட கலப்படமான, நஞ்சான உணவுகளின் ஆதிக்கமும், பொருளாதார இழப்பும் தொடந்து அதிகரிக்கிறது.
இதன் விளைவால் ஆரோக்கியம்கெட்டு, குடும்பத்தினரின் மகிழ்ச்சியும்கெட்டு, சம்பாதித்த பொருளாதரத்தில் பெரும்பகுதி மருத்துவத்திற்கு செலவிட்டும் இழந்ததை மீட்க முடியவில்லை.
இதுபோக இன்று பிறக்கும் குழந்தைகளே சர்க்கரை நோய், சுவாசக்கோளாறு முதல் தீராத பல நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் நமது அருகிலே #இளம் வயது மரணங்களும் அதிகரிப்பதை அனைவரும் கண்டு வருகிறோம்.
இன்னும் கூடுதலாக உணவையும், சூழலையும் நஞ்சாக்கும் #மரபணு_மாற்ற_விதை , உணவையும் நம்மிடம் திணிக்க மெத்த படித்த ஆராய்ச்சியாளர்களும், பெரும் நிறுனவங்களும் முயன்று வருகிறது.
இவற்றிற்கெல்லாம் மாற்று நோக்கி சிந்தித்து “ அனைவருக்குமான வாழ்க்கையை இன்பமாக்குவது என்பது மிக எளிதானது . அதைத் தான் ” #மாற்றம் என்பது #சொல் அல்ல. #செயல் ” என #நம்மாழ்வார் ஐயா அவர்கள் நமக்காக செயல் வடிவமாக வழிகாட்டிச் சென்றுள்ளர். அவை
* நம்முடைய சூழலில் நமக்கான உணவை நாமே #உற்பத்தி செய்வது எப்படி ?
* நம்மால் உற்பத்தி செய்ய முடியாதபோது, நஞ்சில்லா உணவு எவ்வாறு #அடையாளம் காண்பது?
* அந்த உணவை சுற்றுசூழலுக்கும், உடலுக்கும் கேடில்லாமல் உணவாக #சமைப்பது எப்படி?
* நம் அன்றாட வாழ்வில் இயற்கையை மிகமிகக் குறைவாக நுகர்ந்து, #மகிழ்வாய் வாழ்வது எப்படி?
* நம் உடலில் தோன்றும் #தொந்தரவுகளை இயற்கை வாழ்வியலில் எவ்வாறு சரி செய்வது?
* நம்முடைய பொருளாதாரத் தேவைகளை இயற்கை அழிக்காமல், இயற்கையோடு இணைந்த #தொழில் முறைகளின் மூலம் பெருக்கிக் கொள்வது எப்படி?
* அடுத்த #தலைமுறைக்கு நம்முடைய வாழ்வியல் முறைகளை கைமாற்றிக் கொடுப்பது எப்படி?
* மனிதன் மட்டுமல்லாது பல்லுயிர்சூழலும் பாதுகாத்து #இயற்கை வாழ்வியலில் மகிழ்வாய் வாழ்வது எப்படி?
என்கிற அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாக #நம்மாழ்வார் ஐயா உட்பட பல முன்னோடிகள் இச் சமூகத்தில் தங்களது அனுபவங்களையும், வழிகாட்டலையும் நமக்காக வழிகாட்டி சென்றுள்ளார்கள்.
அவ்வழியைப் பின்பற்றி நம்முடைய “#தேன்கனி_இயற்கை_வாழ்வியல்_குழு வினர்கள் “ 2011ல் நம்மாழ்வார் ஐயாவை சந்தித்தது தொடங்கி இன்று 2025 வரை
* இயற்கை வழி #வேளாண்மை யில் மரபு விதை தொடங்கி #நேரடி_சந்தைப்படுத்துதல் வரை
* சிறுதானியங்கள் முதல் மரபு அரிசிகளில் உணவு #மதிப்புக் கூட்டுதல் தொடங்கி சமையல் பயிற்சிகள் வரை
* யோகா, மரபு வழி #இயற்கை மருத்துவங்கள், வாழ்வியல் முறைகள் வரை
* மரம் நடுதல் தொடங்கி, #சுற்றுசூழல் பாதுகாத்தல், குளம் பராமரித்தல் வரை
* பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பினருக்கும் கற்றவற்றை #பயிற்சிகள் மூலம் கைமாற்றிக் கொடுத்தல் வரை சிறப்பாகவும், அனைவரோடும் #ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த மிகநீண்ட பயணத்தில் கிடைத்த #வாழ்வியல் அனுபவங்களை கைமாற்றிக் கொடுக்க வருகிற 2025, #மார்ச்28 வெள்ளி முதல் 30 ஞாயிறு_வரை 3நாள் சிறப்பு பயிற்சியாக இயற்கையான சூழலில் ஏற்பாடு செய்துள்ளோம்.
இப்பயிற்சியில்
* மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், இயற்கை வழி வேளாண்மையின் அடிப்படைகள்…
* மரபு விதைகள் தேர்வு, நர்சரி, நாற்று வளர்ப்பு, காய்கறி & கீரைகள் என உணவு உற்பத்தி…
* மண் மனம் மாறாத கிராமத்து சமையல், அடுப்பில்லா உணவு முறைகள், சிறுதானியங்கள் முதல் மரபு அரிசிகளில் மதிப்புக்கூட்டல்
* நஞ்சான நவீன உணவுகளை வென்றெடுக்கும் மரபு பலகாரங்கள், திண்பண்டங்கள் முதல் மதிப்புக் கூட்டி உணவுகள் வரை….
* ஆரோக்கிய சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்கள் முதல் சமையல் பொடிகள் வரை( பேக்கிங் கலப்பட மசால்பொடிகளுக்கு மாற்றாக), பல்பொடி, குளியல் பொடி, துணி துவைக்கும் பொருட்கள் தயாரிப்பது?
* உடனடித் தாயாரிப்புகளில் ( Ready mix) நவதானிய சத்துமாவு, தோசை மாவு, புட்டு, இடியாப்ப மாவு, முறுக்குமாவு, அடைமாவு மற்றும் பல பல...
* தொட்டிக்குளியல், புற்றுமண் குளியல் , நீராவி குளியல், ஆவிபிடித்தல், மூலிகை சாறு, பானங்கள் தயாரித்தல்
* நமக்கான உடலியல் தொந்தரவுகளை நாமே உணவு, மூலிகைகள், விளையாட்டு மற்றும் இயற்கை வைத்திய முறைகள் & வாழ்வியல் முறைகள் மூலம் சரிசெய்தல்…
* யோகா, கண்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள், மரபு விளையாட்டுகள்…
* மதிப்புக்கூட்டிய பொருட்களின் தேவையும், உள்ளூர் சந்தைப்படுத்துதலும்… என இன்னும் இன்னும் சொல்ல முடியாத வாழ்ந்து கற்று உணர வேண்டிய ஏராளமான அனுபவங்களோடும், மரபு உணவுகளை உண்டு “ கீதா வாழ்வியல் மையத்தின் “ இயற்கை சூழலை அனுபவிக்க குடும்பமாக வருக வருக என வரவேற்கிறோம்.
#பயிற்சி நடைபெறும் இடம் :
#கீதா இயற்கை வாழ்வியல் மையம், (#தேன்கனி இயற்கை உழவர்களின் ஆய்வுப்பண்ணை)
பாறைப்பட்டி, சாத்தூர் சாலை,
#சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.*
#முன்பதிவிற்கு
+91 94435 75431
+91 96554 37242
+91 97876 48002
+91 90955 63792
முன்பதிவு அவசியம்.
(முன்பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 22 வரை )
பயிற்சி பங்களிப்பு பெரியவர்களுக்கு: ரூ.2,600/-
10 முதல் 18வயது குழந்தைகளுக்கு : ரூ. 1,600/- மட்டும்
*இயற்கையான சூழலில் தங்குமிடம், இயற்கை உணவுகள் வழங்கப்படும்.
பணம் செலுத்த வேண்டிய வங்கி எண்
Gpay Narayanan 96554 37242
or
Current A/c Name :
Thenkani Natural Way Products Store
Bank Name : Indian Overseas Bank, Sivakasi.
A/C No : 349002000000182
IFSC Code : IOBA0003490
பயிற்சியின் இறுதியில் பங்கேற்புச் #சான்றிதழ் வழங்கப்படும்.
கடந்த பயிற்சியின் பதிவுகள் காண :
https://www.facebook.com/Thenkanivalviyalmaiyam/posts/1172824747970973
https://www.facebook.com/Thenkanivalviyalmaiyam/posts/1173559437897504
https://www.facebook.com/share/p/18iQd5qAgq/
https://www.facebook.com/share/p/1C8RVbFJJR/
https://www.facebook.com/share/p/18ekesF4ju/
https://www.facebook.com/share/p/15uyxj7KW5/
https://www.facebook.com/karuppasamyvanagam/posts/2257854630933589
https://www.facebook.com/karuppasamyvanagam/posts/pfbid07qXEDrYXbCyqEshqhcwJbTWdq5JiGNjV9foLyWnDdrha6kBmd64cnHQ4H6bEds1el
www.thenkanivalviyalmaiyam.blogspot.in
#தேன்கனி குழுவினரின் செயல்பாடுகளில் சிலவற்றை அறிய கீழுள்ள காணொளிகளைக் காணலாம்.
https://www.youtube.com/watch?v=If12bPo0pTQ&t=69s
https://www.youtube.com/watch?v=GxvBWGla9Gs&t=10s
https://www.youtube.com/watch?v=gUSpcbr5bhE
https://www.youtube.com/watch?v=oUjfIZupdp4&t=1s
https://www.youtube.com/watch?v=yNSmdsVkuv0
https://www.youtube.com/watch?v=81raL4SbjSg
https://www.youtube.com/watch?v=3vJkNqt4tF4
www.thenkanivalviyalmaiyam.blogspot.com
#தேன்கனி
#தற்சார்புபயிற்சி
#நம்மாழ்வார் #Natutal #Food #organic
உழவையும், உணவையும் மீட்ப்போம்.
இயற்கையோடு இணைந்து பல்லுயிர் சூழலில் வாழ்வோம். நன்றி.