Tuesday, July 23, 2024


 *#மரபு #விதைக்_கண்காட்சி 2024 :*



இன்றளவும் கூட பெரும்பாலான உழவர்கள் தங்களுடைய நிலங்களில் *“ஒற்றைப்பயிர் சாகுபடியையே” மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் செய்யும் வேளாண்மை தன்னிறைவு பெறாது. அது ஒரு சார்பு வியாபாரிகளை தான் ஊக்குவிக்கும் என நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்.*


மாறாக *மாறிவரும் பருவகால சூழ்நிலைக்கு ஏற்ப பன்மயமான பயிர்களை சாகுபடி செய்யும் போது நிலத்திற்கும், உழவர்களுக்கும், உண்பவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பார்.*

மேலும் ஒரு *விதையின் வரலாறு, தனித்தன்மை, பருவம், வளரும்விதம், அதன் பாதுகாப்பு முறைகள், அறுவடை தொழில்நுட்பங்கள், உணவுவாகப் பயன்படுத்தும் முறைகள், மருத்துவத் தன்மைகள், மறுபடியும் விதையாக பெருக்கம் செய்தல், பரவலாக்கம் செய்தல் வரை அனைத்து தகவல்களும் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு தொகுப்பட வேண்டும். அவைகள் ஒரு புத்தகமாக மாற்றப்பட்டு அனைவருக்கும் கொண்டு சேர்க்கபட வேண்டும் என நம்மாழ்வார் ஐயா வலியுறுத்துவார்.*



இதற்கான *ஆவணப்படுத்தும் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் தேன்கனி விதை சேகரிப்புக் குழுவினர் கடந்த 10ஆண்டுகளாக தமிழகத்தின் பல உழவர்களோடும், விதை சேகரிப்பாளர்களோடும் கைக்கோர்த்து மண்ணின் பன்மயமான மரபு விதைகளை உற்பத்தி செய்து விதைப் பெருக்கம் செய்து வருகிறோம்.*

இதன்மூலம் தாங்கள் கற்ற அனுபவத்தையும், விதையையும் *அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுத்துவருகிறோம். அதன் தொடர்ச்சியாக சிவகாசியில் 2024, ஜூலை 14ல் கீதா வாழ்வியல் மையத்தில் ” விதைக் கண்காட்சி “ ஏற்பாடு செய்திருந்தோம்.*

*நிகழ்வில் சிவகாசி M.புதுப்பட்டி, மெட்டோஸ் பள்ளி மாணவர்களின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது.*

*மரபு விதைக்கண்காட்சி :*

இக்கண்காட்சியில் *மழையை நம்பி சூழலுக்கு துளியும் கேடுவிளைவிக்காத ” புஞ்சை தானியங்களும், பயறுவகைகளும், எண்ணெய் வித்துக்களும், உரச்செடி வகைகளும், நறுமணப் பொருட்களும், பன்மயமான செடி கொடிகளின் காய்கறி விதை, கீரை, தென்மாவட்டத்தில் விளையும் கிழங்குகள், மரபு நெல் ரகங்கள், வேலி விதைகள் என பன்பயமான விதைகள் காட்சிப்படுத்தப் பட்டன.*

மேலும் அவைகள் சாந்த தகவல்களும், அனுபவங்களும் பகிரப்பட்டது.

*#முளைப்பாரி (விதையின் முளைப்பைப் பாரீர்) :*

#முளைப்பாரி என்பது நம் முன்னோர்களின் மகத்தான வேளாண் தொழில்நுட்பத்தில் ஒன்றாகும். நம்முன்னோர்கள் ஒவ்வொரு ஆண்டும் அறுவடைக்கு முன்னார் செழிப்பான பயிர்களில் விளைந்ததையும், நோய்தாக்குதல், கலப்பில்லாமல் விளைந்ததை அடையாளம் கண்டு அவற்றை முதலில் கைகளால் அறுவடை செய்து விதையாக பராமரித்து வருவார்கள்.

அப்படி பாதுகாத்த *விதையை ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலங்களில் விதையின் முளைப்பை சோதித்து அறிய ”முளைப்பாரியிட்டு “ வந்தனர். பின் அவரவர் முளைப்பாரிகளை மொத்தமாக ஓரிடத்தில் திருவிழாவாக நடத்தி காட்சிப்படுத்தி யாருடைய விதையின் முளைபாரி சிறப்பாக இருந்ததோ, அவர்களின் விதையை தேர்வு செய்து பயிரிட்டு நல்வாழ்வு வந்தனர்.*

ஆனால் வேளாண்மையை விட்டு நகரமயமாக்கல் விளைவால் நகரப்பட்ட மக்களின் வாழ்வியல் மாற்றத்தால் சடங்காக மாற்றப்பட்டது. மேலும் இன்றைய நவீன உழவர்கள் விதைக்கும் நாளுக்கும் முந்தைய நாளில் தான் விதைக்கடைக்கு சென்று அவர்களின் தரவுகளின் அடிப்படையில் நேரடியாக நிலத்தில் விதைக்கின்றனர்.

*இந்நிலை மாற முளைப்பாரியின் நோக்கம் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்த தேன்கனி குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் உற்பத்தி செய்த, சேகரித்த விதையினை “ முளைப்பாரி “ சோதனை செய்வது வழக்கம்.*

அதுபோல் *இந்தாண்டும் விதைக்கண்காட்சியில் முதல் நிகழ்வாக முளைப்பாரியிட்டு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என கூடி, பறை முழங்க எங்கள் விதையின் முளைப்பைப் பாரீர் என ஊரைச் சுற்றி இறுதியில் நம்மாழ்வார் ஐயாவிற்கு படைத்தோம்,*

பின்னர் *கீதா வாழ்வியல் மையத்தின் நிறுவனர்கள் திரு இராத கிருஷ்ணன் & கீதா அவர்கள் மையத்தின் நோக்கம் கூறு வந்திருந்தவர்களை வரவேற்றனர். பின்னர் தேன்கனி அமைப்பின் நிறுவனர் திரு. ஞானசேகரன் ஐயா அவர்கள் தேன்கனி அமைப்பின் 10 ஆண்டுகால நோக்கம் செயல்பாடுகளை விளக்கினார்கள்.*


*அனுபவப் பகிர்வு :*
ஒவ்வொரு நிகழ்விலும் நாம் கற்ற அனுபவங்களை பகிர்தல் தான் முதன்மை .ஆகையால் இந்நிகழ்விலும் *நம்மாழ்வார் ஐயாவோடு பயணித்த அனுபவங்களையும், தன் வாழ்வில் சுனாமி தொடங்கி இன்றுவரை கற்றுணர்ந்த அனுபவங்களையும், விதைப்பெருக்கத்திற்கான நோக்கத்தையும் மிகத் தெளிவாக வேதாரண்யம் பெரிய குத்தகை க. குமரவேல் ஐயா அவர்கள் பகிர்ந்தார்கள். மேலும் தேன்கனி குழுவினர்கள் நிகழ்விலும் அரங்குகளிலும் தங்களுடைய கள அனுபவத்தைப் பகிர்ந்தார்கள்.*

நிகழ்வில் முன்னோடி இயற்கை உழவர்களான *ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்மணி ஐயா, திரு. ராஜ்குமார் & பார்த்தசாராதி ஐயா, குன்னூர் கார்த்திகேயன், கருப்பம்புலம் சிவாஜி ஐயாவின் நெல். தஞ்சைப் பகுதியிலிருந்து முருகேஷ் அவர்களின் நெல், திரு. செல்வம், அரியலூர் பொன்னுசாமி ஐயா அவர்களும் என பலர் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்தனர்.*

மேலும் மதுரை திருமங்கலம் பகுதியிலிருந்து உயிர் ஆற்றல் வேளாண்மையை சிறப்பாக செய்துவரும் உழவர் குழுவினரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தார்கள்.

கைவினைப் பொருட்களின் அவசியமும், சிரட்டையில் தொடங்கி அதன் பயணத்தில் வழி தொடந்து இன்று பெரியகுழுவாக சந்தை வரை நகர்ந்துள்ள *சிரட்டை சிற்பி. அனந்த பெருமாள் & நெல்லை நம்மாழ்வார் உழவர் சந்தையினர் அவர்களும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தனர்.*

பின் *நெசவின் முக்கியத்துவமும், அதனை வாழ்வியலாக வாழ்ந்தும் பயிற்சியும் அளித்துவரும் திரு. பொன்மாரிமுத்து மற்றும் சரவணன் அவர்களும் தங்களுடைய நெசவு அனுபவங்களையும், அதன் பொருட்களையும் காட்சிப்படுத்தினார்கள்.*

*வாழும் கிராமம் & கிராம சபை :*
இந்நிகழ்வில் #நம்மாழ்வார் ஐயாவின் *வாழும் *கிராமத்தை செயல்படுத்தி வரும் திரு. பிரசன்ன கண்ணன் & அருண்சங்கர் குழுவினர் அவர்களின் அனுபவத்தை காட்சி & பகிர்ந்தார்கள்.*

மேலும் *இந்நிகழ்வில் இயற்கை உணவாக காலை “ கம்பங்கூழ்” மதிய சிறுதானிய உணவுகளும் தேன்கனி திரு.ஞானசேகரன், லட்சுமி, பேச்சி, ஆவுடை சங்கர் குடும்பத்தினர்கள், கஜேந்திரன் மகாலட்சுமி குடும்பத்தினர்கள் , தன்னார்வலர்கள் என பலரும் இணைந்து குடும்ப நிகழ்வாக ஒத்துழைப்பு வழங்கினார்கள்.*

*500வது #தேன்கனி வாரச் சந்தை:*
#தேன்கனி உழவர் வாரச்சந்தை தனது *11வது ஆண்டில்”500வது வாரச் சந்தையை நிகழ்வில் ஒருங்கிணைத்து இருந்தோம்*. இப்பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். இப்பெரு முயற்சியின் பின்னனியில் பல பல உழவர்களும், மதிப்புக்கூட்டல் நண்பர்களும், இயற்கை மருத்துவர்களும், தன்னார்வலர்களும் தேன்கனியோடு பயணித்துவரும் நுகர்வோர் நண்பர்களும் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பல பல நன்றி நன்றிகள்.

*வளையல் அணிவித்தல் :*
மேலும் *தேன்கனி குழுவின் உழவர் & சிலம்பம் திருமதி. சோபனா மகாராஜன் அவர்களுக்கு நம்மாழ்வார் ஐயா & ஒத்த சிந்தனையாலர்கள் ஆசியோடும் விதை, முளைப்பாரி முன்னிலையில் சுகமாக குழந்தை பெற்றெடுக்க வேண்டி வளையல் அணிவித்து வாழ்த்தினார்கள்.*

*இந்நிகழ்வு சிறப்பாக நடக்க தன்னார்வமாக பணியாற்றிய அனைத்து களப்பணியாளர்களுக்கும், நன்கொடை அளித்த தொண்டு உள்ளங்களுக்கும், தமிழகத்தின் பலப்பகுதிகளிலிருந்து நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி நன்றி…*

*மரபு விதைகளை காப்போம்…*
*வேளாண்மையை மீட்போம்…*

*#விதை & இயற்கை வேளாண்மை சார்ந்த மேலும் விபரங்களுக்கு :*

தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு , சிவகாசி.
*#தொடர்புக்கு :*
*+91 94435 75431*
*+91 96554 37242*
*+91 97876 48002*
*+91 90955 63792*

*தேன்கனி வாட்ஸாப் குழுவில் இணைய* https://chat.whatsapp.com/AWD1gfT8xUi89t8leuDNjw

www.thenkanivalviyalmaiyam.blogspot.com
www.facebook.com/Thenkanivalviyalmaiyam

நன்றி...